பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

கல்வி உளவியல் கோட்பாடுகள்


களாகவும் அமைகின்றன. குருடர் கற்கும் முறையினை உற்று நோக்கினால் இவ்வுண்மை புலனாகும். ஆராய்ச்சியாளர்கள் ஊற்றுப்புலனை நான்காகப் பிரித்துள்ளனர். அவை: தொடுபுலன் (அமுக்கம்), சுடுபுலன், குளிர்புலன், கொப்புலன் (வலி) என்பவை. இவைகளுக்குப் புகுவாய்கள் பலவகையாக அமைந்து கிடக்


படம் 18 : தோலுணர்ச்சி அமைப்புகளில் சிலவற்றைக் காட்டுவது.

கின்றன. இவை ஒரே புலனாக விளங்கினால், நோயினால் இவற்றுள் யாதேனும் ஒரு புலன் கேடுறும்போது மற்றைய புலன்களும் கேடுறுதல் வேண்டும். ஆனால், நடைமுறையில் அவ்வா தறில்லை. நோயாளிகளிடையே இவற்றுள் ஒன்று கெடினும் மற்றைய புலன்கள் கெடாது விளங்கக் காண்கின்றோம். எனவே, இவை வேறு வேறு புலன்கள் என்பது தெளிவாகின்றது. நம் தோலின் சில இடங்கள் வெப்பத்தை மட்டிலும் அறியும்; சில குளிரை மட்டும் அறியும்; சில நோதலை மட்டும் அறியும்.

ஊற்றுப்புலனின் புகுவாய்களில் சில தோலின் புறத்திலேயே உள்ளன; சில உள்தோலில் உள்ளன. குளிரை விரைவில் அறி கின்றோம்; வெப்பத்தைச் சிறிது காலத் தாழ்த்தே அறிகின்றோம்; ஆதலின் குளிர்புலனின் புகுவாய் தோலின் மேலும்,