பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

எனக் கல்லியியல் பற்றி நன்னூல்களைப் பதிப்பித்து கல்வி உலகிற்குப் பெரிய பணியினைச் செய்து வருகிறது. இப்பொழுது இந்த வரிசையில் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவர்களின் 'கல்வி உளவியல் கோட்பாடுகள்' எனும் ஆய்வு நூலை பேணவாவுடன் வெளிக் கொணர்கிறது. வளர்ந்து வரும் உளவியலையம் நாளும் சிறந்து வரும் கல்வியியலையும் நன்குணர்ந்த பேராசிரியர் சுப்புரெட்டியார் திட்ப நுட்பத்துடன் இந்நூலை ஆக்கியுள்ளார்.

கல்வியியல் மானிடவியலின் எல்லா இயலுக்கும் அடிப்படை இயலாகும். கற்கத் தொடங்கும் குழந்தைப் பருவமுதல் சாந்துணையும் கற்றல் எனும் நெறிப்படி மனிதரிடம் கற்கும் இயல்பும் கற்க விழையும் உள்ளத்தியல்பும் கல்விமுறைகளின் அடிப்படை இயல்புகளும் கல்வியியலின் நுண்கூறுகளும் செறிவுடன் மிகத்தெளிவாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. மேலைப் புலங்களில் மெத்த வளர்ந்துள்ள உளவியல் கோட்பாடு ஒவ்வொன்றும் எளிய தமிழில் எல்லோருக்கும் விளங்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.

நூலறிவு, நுண்ணறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, பொது அறிவு, கல்வி கேள்விநலன்கள், மானிட ஆற்றலில் மகத்தான சுல்வி சாதனைகள் அத்துணையும் விளக்கப் பெற்றுள்ளன.

இந்நூலாசிரியர் பேராசிரியர் சுப்புரெட்டியார் பன்னூலாசிரியர்; பல்துறை அறிஞர்; பெரிய நூல்களை எழுதுவதை விருப்பமிகு பணியாக எடுத்துக் கொண்டு எழுதும் உழைப்புக்கஞ்சா பெருவீரர்; செயல்திறன் மிக்க செம்மல், வேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையைத் தோற்று வித்து வளர்த்த பெருமகனார். எடுத்த காரியத்தைச் செம்மையாக முடிக்கும் இயல்பினர். ஐம்பது ஆண்டுகளாகக் கல்வியியலில் ஈடுபட்டு உழைத்து, பல்துறை நூல்களைத் தமிழுக்கு அளித்துத் தமிழில் கல்வியியல் நூல் சிறக்கத் தனிப் பெரும் தலைமகனாகத் திகழ்கிறார், சிறப்புமிகு தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியராகவும் திகழ்ந்தவர், அவரே ஒரு கலைக் களஞ்சியம்.