பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கல்வி உளவியல் கோட்பாடுகள்


கூடும். தோலின்மீது நொப்புலப் புகுவாய்கள் அதிகமாக உள்ளன. தோவின் அருகே முடியும் நரம்புகளை நேரே தீங்கு விளைவிக்கக் கூடிய எப்பொருளும் (தூண்டல்கள்) தாக்கும் பொழுது நோவு எடுக்கின்றது. இக் கிளர்ச்சி மூளையிலுள்ள நோவெல்லையில் சென்று முடிகின்றது. நோவானது தனியாக எழுவதில்லை; வேறு புலன்களோடு சேர்ந்தே எழுகின்றது. மிகவும் சுட்டாலும், மிகவும் குளிர்ந்தாலும், மிகவும் உறுத் தினாலும் நோவெடுக்கின்றது. சுடுபுலப்புகுவாய் முதலியவற்றில் துண்டல் தாக்கும்பொழுது அப் புகுவாய்கள் கொள்ளமுடியாது மிகுந்த கிளர்ச்சி சுற்றிலும் பரவித் தனியே கிடக்கும் நரம்பு களைத் தாக்குகின்றது; அதனால் நோவெடுக்கின்றது. ஆகவே, நோவுகள் அவை எழும் இடத்தாலும், நீடிக்கும் கால அளவாலும், பரவும் இட அளவாலும், உடன் எழும் புலன் களாலும் வேறுபட்டுப் பல பெயர்களைப் பெறுகின்றன. இறுதல், குத்தல், வெட்டு, கடி, புண் என்பன தொடுபுல வகையால் பெயர் பெற்ற நோவுகள், சுடுபுண் என்பது சுடுபுல வகையால் பெயர் பெற்ற நோவு. வயிற்று நோய், குடர்நோய் என்பன அவை எழும் இடவகையால் பெயர் பெற்றன. சுளுக்கு, தசையிறுக்கம் என்பன தசைப்புலன் வகையால் பெயர் பெற்றன.

இப் புலன் துன்பமாகவே விளங்குகின்றது. இதன் சிறப்பியல்புகளைப் பிரித்தறிவது அருமையினும் அருமை. கண் ணோய்க்கும் தோல்மேல் உள்ள புண்ணோய்க்கும் வேற்றுமை தோன்றுகின்றது. ஆனால், அவ்வேற்றுமை தொப்புல வேற்றுமை அன்று; அதனோடெழும் தொடுப்புலன் தசைப்புலன் இவற்றின் வேற்றுமையாகும். சுரீலெனக் குத்தும் நோவிற்கும் பரந்து மழுங்கலான நோவிற்கும் உள்ள வேற்றுமையும் நொப்புல வேற்றுமையன்று. குத்தல் எடுக்கும் நோவில் சில நரம்புகளில் நோவு ஒருமுகப்படுகின்றது; பரந்த நோவில் பல நரம்புகளிலும் கிளர்ச்சி பரவுகின்றது. துடிக்கும் நோவிற்கும் நீண்டநாளாய்த் தொடர்ந்து வரும் நோவிற்கும் உள்ள வேற்றுமை காலத்தால் எழுந்த வேற்றுமையேயாகும். மீந்தோல்மேல் எழும் நோவு களோ கண்னெல்லாம் மின்னிப் போவதுபோல நோகின்றன. உள்ளுறுப்பில் எழுவனவோ, எங்கோ தொலைவில் எழுவன போல மங்கலாகத் தோன்றுகின்றன.

நோவு மனத்திற்குப் பிடிக்காமற் போயினும், மற்றைய புலன்களைப்போல் பெரும் பயனைத் தருவதொன்றேயாகும். ஒருவகையில் நோக்குமிடத்து இந் நொப்புலன் அவற்றினும் சிறந்ததொன்று எனலாம். நமக்கு நேரிடும் தீங்கினை முன்னதாக அறிவித்து அத் தீங்கினைப் போக்கிக்கொள்ள நம்மை