பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கல்வி உளவியல் கோட்பாடுகள்


நிலைப் புலன்

நாம் நிலையாய் இருப்பதனையும், இயங்குவதனையும், நிலைபிறழ்வதனையும் அறிவதற்கு வாயிலாக இருப்பதனை நிலைப்புலன் [1]என்று வழங்கலாம். மிகச் சிக்கலான இவ்வுலக வாழ்வில் சிறப்பாக ஒடும்போது அல்லது விளையாடும்போது, நாம் தொடர்ந்தாற்போல் நேர்த்தியான பொருத்தப்பாடு களைச் செய்த வண்ணம் இருக்கின்றோம். இத்தகைய பொருத்தப்பாடுகளைப் புரிவதற்குச் சிறு மூளையே மிகவும் பொறுப்புள்ளதாக அமைகின்றது. இதற்கேற்ற புலப்பொறி எங்கு உள்ளது? உட்செவியில் புரிமுடியினை அடுத்து மூன்று பிறைவடிவமான வளையங்கள் உள்ளன எனக் கண்டோம் அன்றோ? அவையே நிலைப்பொறியாகும். அவைதாம் ஒன்றுக் கொன்று நேர்குறுக்காக அமைந்து கிடக்கின்றன. ஒன்று நீளநிலையிலும், ஒன்று அகலநிலையிலும் ஒன்று உயரநிலை யிலுமாக நின்று அவை மூன்று இடநிலையையும் குறித்து வருகின்றன. இம்மூன்று பிறை வளையங்களும் முருந்து எலும்பினால் ஆகிய குழைகளாகும். இவற்றில் நிறைய ஒரு வகைப் பாய்மம்'[2] தளும்புகின்றது. நாம் தலையைக் கோணலாக இயக்கும்போது இவ் வளையங்களில் உள்ள பாய்மமும் அசைகின்றது, அவ் வசைவால் வளையத்தில் ஒரு மூலையில் பாய்மம் பாய்ந்து மிகுகின்றது. உயரம், நீளம், அகலம் என்ற மூன்று நிலைகளுக்கேற்றவாறு அவ் வவ்வளையங் களில் நீர் அசைகின்றது. அவற்றின் ஒரு முனையில் பாய்மச் செறிவும், மற்றொரு முனையில் பாய்மக் குறைவும் உண்டாவதால் நிலை மாறுதலை உணர்கின்றோம்.

பலநாள் வரையிலும் இவ் வளையங்களைச் செவிப் புலனுக்குப் பயன்படுவன என்றே பலர் கருதினர். செவிப் புலனுக்கும் இவற்றிற்கும் ஒரியைபும் இல்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது. இவையே நிலைப்புலனைப்பற்றிய பொறி என்பதும் உறுதியாகியது. நிலைநிற்பதனையும் நி ைல மாற்றத்தையும் உயிரிகள் அறிந்தாலன்றி அவை இயங்க இயலாது. ஆதலின் இந்நிலைப்புலன் இன்றியமையாச் சிறப் புடையதாகும். உயிரிகளிடைப்ே முதலில் தோன்றியது இப் புலனே; மீனாய்க் கடலில் வாழ்ந்த காலத்தில் தோன்றியது அது. தரையில் வாழவந்தபோது காற்றின் நிலை மாற்றங் களை அறிய வேண்டியதாயிற்று. செவிப்பொறி முற்றி


  1. 158.நிலைப்புலன் -Static sense.
  2. 159.பாய்மம்-fluid. -