பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனும் சூழ்நிலையும்

75


வளர்ந்தது. இந்த நிலைப்புலனும் இயக்கப்புலனும் உள்ளமை யால்தான் நடத்தல், இயங்குதல் முதலியன பழக்கமாகின்றன.

உட்புலன்

.

பசி, நீர்விடாய், வாந்தி, பால்-உணர்வுகள் போன்ற புலனுணர்ச்சிகள் யாவும் உட்புலன்கள்[1]' என்று வழங்கப்பெறு கின்றன. இவை யாவும் உடலின் உட்பகுதிகளில் எழுகின்றன. இப்பொறியுணர்ச்சிகள் யாவும் உடலின் அடிப்படையான தேவைகளுடன் மிக நெருங்கிய உறவு கொண்டுள்ளன; ஆகவே, இவை செயலுக்குரிய உள்துண்டல்கள்[2]' அல்லது உந்து நிலை[3]களை உண்டாக்குகின்றன. சிறப்பாக இவை உயிரியின் நலத்தையும் அதன் குருதி நன்னிலையில் இருத்தலையும் நிலை நிறுத்துவதில் பங்கு பெறுகின்றன. சில சமயம் இயக்கப்புலன், நிலைப்புலன், ஊற்றுப்புலன் ஆகியவற்றுடன் உட்புலன் சேர்ந்து உடற்புலன்கள் [4]எனவும் வழங்கப் பெறுகின்றது.

புலப்பயிற்சி

புலன்களே அறிவின் வாயில்கள் என்பதை நாம் அறிவோம். ஆதலின், குழந்தைக் கல்வியில் புலப்பயிற்சிக்குச் சிறப்பிடம் அளிக்கப் பெற்றுள்ளது. புலன்களைப் பயன்படுத்திப் பொருள்களை அறியாவிடில், குழந்தைகள் தம் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் தகுந்த அடிப்படையின்றி, பல தவறான கருத்துகளையுடையவராவர். நாட்டுப்புறச் சூழ்நிலையையே அறியாத நகர்ப்புறச் சிறுவர் களில் நெல் காய்ச்சி மரம்' என்போரும் உண்டு. ஏதாவது ஒரு பொருளை (எ-டு-பந்து) ஒரு குழந்தையிடம் கொடுத்தால், அஃது இயல்பாகவே அதைப் பார்க்கிறது; ஓசைப்படுத்துகிறது; தொட்டுத்தடவுகிறது; அமுக்குகிறது; கடித்துச் சுவையறிகிறது; முகர்ந்து மணம் அறிகிறது; உடைக்கவும் முயல்கிறது. அது எல்லாப் புலன்களையும் பயன்படுத்திப் பொருளின் தன்மையை அறிய முயல்கின்றது. பள்ளிக்கு வருமுன் சிறுவன் கற்கும் முறையும் இதுவே. பள்ளிக்கு வந்தவுடனும் அவன் இம்முறை யையே மேற்கொள்வான் என்பதை மறக்கலாகாது. இங்ஙனம் புலன்களின் பயிற்சியே இயற்கையன்னையின் கல்விமுறை என்பதை மாண்டிசோரி, ஃபிராபெல் போன்ற கல்வி வல்லுநர்கள


  1. 160,உட்புலன்கள்-Organic Sensation.
  2. உள்துண்டல்கள்-inner urge
  3. 162. உந்துநிலை. Drive.
  4. 161உடற்புலன்கள் .Somesthetic or body sensation,