பக்கம்:கல்வி எனும் கண்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106
கல்வி எனும் கண்
 

வழியில்லை. பெரும்பாலும் இவ்வகுப்புகள் பாதிநாட்களோ, சுமார் மூன்றுமணி நேரமோ நடப்பதால் உணவு வேறு பாட்டினைக் காணவும் முடியாது. சில குழந்தைகளுக்குப் பெற்றோர் இடைவேளையில் ஏதேனும் பருகக் கொண்டு வந்து தருவர். அது அதிக வேற்றுமையை ஏற்படுத்தாது. எனினும் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தனிச் சலுகை தரக் கட்டாயப்படுத்தும் போதுதான் தொல்லை உண்டாகிறது.

L.K,G. U.K G. வகுப்புகளில் எழுத்து வேலைகள் அதிகம் இல்லை என்றாலும் குழந்தைகள் விரும்பியபடி வண்ணப் படங்கள் தீட்ட், வண்ணக் கோல்கள் பள்ளிகளில் தரப்பெறுகின்றன. அக் குழந்தைகள் கிறுக்கி வரையும் படங்களை ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் காட்டி அவை மகிழும் போதும் நாம் நம்மை மறக்கிறோம். சிறு சிறு அடிகளா லாகிய பாடல்களைப் பாடும்போதும் கேட்போருக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. ஆனால் அவை வேற்றுமொழியிலன்றோ பெரும்பாலான பள்ளிகளில் பயிற்றப்பெறுகின்றன. இந்த இரு வகுப்பிலும் தமிழே இல்லாத பள்ளிகள் சென்னை நகரில் பல உள்ளன. இதனைத் தடுக்க வழிகாணவேண்டும், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்ற வாக்கு என்றும் உண்மையாகுமாதலால் இந்த இளமையில் கற்றுத்தரும் கல்வியே வரும் காலச் சமுதாயத்தை வாழவைக்கும்-வளர வைக்கும். இந்த உண்மையினை எண்ணி அரசும் பிறரும் செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.