பக்கம்:கல்வி எனும் கண்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கல்வி எனும் கண்


against the barest minimum requirement of funds amounting to Rs. 189 crores during 1989-90, the actual amount provided was of the order of 76.17 crores. The position was somewhat improved in 1990-91 when a sum of Rs.96 crores was provided, considering the magnitude of the problem of illiteracy the large uncover area and the need for mobilisation (A total of Rs.227 crores was spent under NLM during the years 1987-88 to 1989-90). Much more funds are required even for implementing a purely volunteer-based, campaign-oriented plan of action than what has been provided. (Towards an Enlightened and Humane Society-Pages 198 & 194)

நம் நாட்டிலேயே மலையாள மாநிலத்தில் நூற்றுக்கு நூறு கற்றவர்கள் இருக்கும் போது ஒவ்வொரு மாநிலமும் அத்தகைய முயற்சிகளை ஏன் மேற்கொள்ளலாகாது. , ஒரு சில மாநிலங்கள் ஓரளவு முயல்கின்றன. எனினும் போதிய அளவு இல்லை என்பதையே நாட்டுநிலை காட்டுகின்றது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் கோவை மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு எழுத்தறிவிப்பு இயக்கம் அமைந்ததென அறிகிறோம். (திரு. இராமமூர்த்தியின் வெளியீடு 196) 5.25 இலட்சம் எழுத்தறியா மக்களுக்கு உதவ, அதை 21 பகுதிகளாகப் பிரித்து சுமார் 50,000 தனியார் உதவி நிறுவனங்கள் வழியே செயலாற்றி 1990 ஏப்பிரல் முதல் 1992 மார்ச்சு முடியுமுன், அம்மாவட்டத்தையே முழுதும் கற்ற மாவட்டமாக்க முயல்வதாக அரசாங்கக் குறிப்பு காட்டுகிறது. எனினும் அங்கேயும் அவர்கள் நினைத்தபடி பயன்விளையவில்லை என்றே கூறுகின்றனர். ஆம்! கடந்த நாற்பது ஆண்டுகளில் இளம் பிள்ளைகள் (5-14) கட்டாயமாகப் பயில வேண்டிய திட்டத்தினை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றி இருந்தால் இன்று இந்த அவலநிலை இராது அல்லவா!