பக்கம்:கல்வி எனும் கண்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுநல்ல ஆசிரியரின் இலக்கணம்
குலன் அருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம், மலை நிறைகோல், மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர் குணம் இணையவும்
அமைபவன் நூல் உரை ஆசிரியன்னே.

(நன்னூல்)பாடம் சொல்லும் முறை
ஈதல் இயல்பே இயம்பும் காலை
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படுபொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தின் நூல்கொடுத்தல் என்ப.

(நன்னூல்)


பாடம்கேட்கும் முறை
கோடல்மரபே கூறும் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி அவன்குறிப்பின் சார்ந்து
இருஎன இருந்து சொல்எனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தின் ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவி வாயாக நெஞ்சு களனாகக்
கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்துப்
போ எனப் போதல் என்மனார் புலவர்.

(நன்னூல்)