பக்கம்:கல்வி எனும் கண்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
கல்வி எனும் கண்
 

செய்ய முடியாது என்ற நினைவில் பலர் படிக்காமலும் பள்ளிக்குப் பல நாள் வராமலும் வேறு வகையில் வாழ்கின்றனர். சில பெற்றோர் தங்கள் வேலைகளுக்குப் பிள்ளைகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வினை முறையாக நடத்தி நன்கு எழுதி வெற்றி பெறுபவரையே மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும், எந்தவிதத் தேர்வும் இன்றிப் பத்தாம் வகுப்பு வரையில் செல்லலாம் என்ற நிலை ஒருகால் இருந்தது. நூற்றுக்குப் பதினைந்து பெற்றால் போதும்; மேல் வகுப்பிற்குப் போகலாம் என்ற நியதியும் ஒருகால் இருந்தது. இன்று அவை இல்லை என எண்ணுகிறேன். பள்ளியில் பயிலும் பிள்ளைகள் வகுப்பிற்கு ஏற்ற பாடங்களை முறையாகப் பயின்று படிப்படியாக மேலேறினால் தான் பயன் உண்டு. இந்த நிலை நன்கு வற்புறுத்தப்பட வேண்டும்.

ஆண்டுதோறும் ஆசிரியர் நாள் (செப்-5) நடைபெறுகிறது தேர்ச்சிபெற்ற சிறந்த மாணவர்களுக்குப் பரிசுவழங்கப் பெறுகிறது. நல்லாசிரியர் விருதும் வழங்கப்பெறுகின்றது. ‘நல்லாசிரியர்’ விருது பற்றிச் சிலருக்கு மனக்கசப்பு உண்டு. இங்கே நான் அதுபற்றி ஆராயவிரும்பவில்லை. ஆனால் மாணவருக்குப் பரிசு வழங்குவது எண்ணத்தக்கது. பல பள்ளிகளில் மாணவர் தங்கள் தங்கள் பள்ளிகளிலேயே தேர்வு எழுதுகின்றனர். பல பள்ளிக்கூட மாணவர்கள் வேறுபள்ளிகளுக்குச் செல்கின்றனர். இதன் காரணத்தை நான் ஆராய வேண்டா. ஆனால் தம் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தாமே விடைசொல்லித் தருவதும், நூல்களைத் தந்து விடை எழுத வைப்பதும் சிலவிடங்களில் நிகழ்கின்றன. ஆனால் அதே பள்ளியில் தேர்வு எழுதும் வேற்றுப்பள்ளி மாணவர்களுக்கு வினாத்தாளும் உரிய வேளையில் தருவதில்லை முடியப் பத்து நிமிடம் இருக்கும் போது, எழுதத் தாள்கேட்டால், ‘நீ இனி என்ன எழுதிக் கிழிக்கப்போகிறாய்! போதும் கொடு’ என்று தடுப்பவரும் உள்ளனர். இதுபோன்ற