பக்கம்:கல்வி எனும் கண்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி எனும் கண்

35


இல்லாதவர்கள்கூட இரண்டொரு நிறுத்துமிடமாயினும் அதன் முற்றிய எல்லை வரையில் இலவசச்சீட்டு வாங்கி உந்து வண்டிகளில் நெரிசலை உண்டாக்குகின்றனர். மேலும் இதைத் தயாரிப்பதற்கும் தகவல்கள் சேர்த்து அனுப்புவதற்கும் போக்குவரத்து அலுவலகமும் ஒவ்வொரு பள்ளியும் பெறும் அல்லலும் அவதியும் எழுத முடியா! பல பள்ளிகளில் இதனால் முறையான வேலையும் தடைப்படுகிறது. பெற்றோர்களும் மாணவர்களும் உடன் வாங்கித் தரவில்லையே என வாதிடும் நிலையும் உண்டாகிறது. இப்படித் தேவையற்ற வகையில்-அரசியல் பின்னணியில் அமையும் சில செயல்களைப் பற்றி அதிகம் எழுதாமல் இருப்பதே நலமென எண்ணுகிறேன்.

இதுவரை கூறியவாற்றால் தமிழகக் கல்வியின் முந்திய ஏற்றம், இடைக்காலப் பின்னடைவு, இன்றைய குறைகள், பள்ளிகளின் வகைகள், பிறநாட்டு நிலையில் கல்வி அமைப்பு முதலியவற்றை ஓரளவு சுட்டிக் காட்டினேன். நீக்க வேண்டியவை பற்றியும் ஆக்க வேண்டியவை பற்றியும் சமுதாய முன்னேற்றத்திற்கும் தமிழகம் முன்போன்று முன் நின்று உயர்நிலை பெறுதற்கும் வழித்துறைகளை ஓரளவு சுட்டிக் காட்டினேன். இனி ஒவ்வொரு துறையினையும் தனித்தனியே கொண்டு அததில் உள்ள நலக்கேடுகளையும் தேவையான திருத்தங்களையும் பிறவற்றையும் பற்றி ஆராயலாம் என எண்ணுகிறேன்.

மேலும் ஆசிரியர் நிலை, மாணவர், பெற்றோர் நிலை, நாட்டு நடப்பு, அரசாங்கத்தின் கடமை போன்றவற்றையும் உடன் எண்ணிப் பார்த்தலும் ஏற்புடைத்தாகும் என நினைக்கின்றேன். தொடர்ந்து நாட்டுக் கல்வி நலம் பெற்று, உலக அரங்கில் நம் பாரதமும் சிறப்பாகத் தமிழகமும் உயர்வெய்தி உலகோர் போற்றும் நிலை எய்தவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இனி வருவனவற்றை எழுத நினைக்கிறேன். ஒருவரையும் குறைசொல்லுவதற்கென்றோ குற்றம்