பக்கம்:கல்வி எனும் கண்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
கல்வி எனும் கண்
 

சாட்டுவதற்கென்றோ வேறு பழிபடர்நிலையிலோ நான் இவற்றை எழுதவில்லை. ‘ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும்’ என்ற அடிப்படையில் நாட்டு நலன்-அதன் கண்ணாகிய கல்வி-அதை மக்களுக்கு அளிக்கும் மரபும் முறையும்-இவை பற்றியே என் எண்ணமும் எழுத்தும் பற்றிப் படரும் எனக்கூறி மேலே செல்லுகின்றேன்.

நம் நாட்டுக் கல்வி வளராமைக்கு இந்திய அரசாங்கம் அமைத்த கல்வி ஆய்வு பற்றியும் திருத்த வேண்டிய முறை பற்றியும் விளக்க அமைத்த குழுவின் அமைப்பாளர் திரு. இராமமூர்த்தி அவர்தம் முன்னுரையில் கூறியவற்றை அப்படியே உங்கள் முன்வைக்கிறேன்.

One fundamental reason for failure has been that while we go on making radical protestations, our education to this day continues to be governed by the same assumptions, goals and values that governed it in the days of the British Raj. The British believed in the ‘downward filtration theory’ under which education and culture would inevitably flow from the classes to the masses. They kept the common people away from education. and education away from life. But things have not much changed since they left. Even today the principal beneficiaries of our education are the upper and middle classes. To them also we give a wrong education. Our formal system remains confined to the four walls of a school or college. It is tied down to text books and examinations. Even then the books are unreadable and the examinations totally unreliable, The courses of study are so framed that the students are not equipped with any productive skills. Whatever education they receive cuts them off from their natural and social environment. They become aliens to their