பக்கம்:கல்வி எனும் கண்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கல்வி எனும் கண்


என்று கூறக் கேட்கிறோம். ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் அமைத்து, பயனுள்ள முறையன்றி மாறுபடுவதைப் பலர் சுட்டிக் காட்டி வருகின்றனர். பல்கலைக்கழகத்திலும் அதன் அங்கங்களாகிய கல்லூரிகளிலும் இன்றைய நிலை வருந்தத்தக்கதாக உள்ளது. எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தமும் உண்ணாவிரதமும் மேற்கொள்ளும் முறை இத்தூய தெய்வத்தலங்களில் நடைபெறுவது வருந்தத்தக்கது. அத்தகைய அவலநிலைக்கு அவர்களைத் தள்ளாத வகையில் ஆட்சியாளரும் செயல்படவேண்டும்.

ஒரு பாடத்துக்கு நான்கு அல்லது மூன்று ஆசிரியர் எனப் பாடம் நடத்துகின்றனர். இதனால் மாணவர் தம் ஆற்றலும் உணர்வும் சிதறி நிற்கின்றன: பண்டைக் காலத்திய குருகுலம் இன்றேனும், ஒரு பாடத்தினை-அல்லது தேர்வுக்கு ஒரு தாளுக்குரிய பாடத்தினை ஒரே ஆசிரியர் நடத்தின் நல்ல பயன் விளையும். ஆனால் பாடத்திட்டமோ பயிற்று முறையோ அவ்வாறு அமைவதில்லை. ஆசிரியர்களும், முன்னரே நான் காட்டியபடி எந்தப் பயிற்சியும் பெறாமல் திடீரெனக் கற்பிக்க வந்து விடுகின்றனர். ஆசிரியர்களுக்குக் குறைந்தது இரண்டாண்டுகளாவது பயிற்சி அளிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். அப்படிச் செய்யும் பொழுது, பிற தனிச் சிறப்புக் கல்லூரிகளுக்கு அமைக்கும் வகையில், குறைந்தது நூற்றுக்கு எழுபது எண்ணாவது பெற்றவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.* (சாதாரண் பட்ட வகுப்பில் ‘பி.பி.எ.’ என்ற வகுப்பிற்கும் நூற்றுக்கு அறுபதுக்குக் குறையாத மதிப்பெண் வேண்டுமென்று சென்னைப் பல்கலைக்கழகம் வற்புறுத்துகின்றது) அவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தினைத் திறம்பட நடத்தும் வகையில் ஏற்ற பயிற்சி அளிக்கப் பெறல் வேண்டும். இந்த வகையில் நல்லாசிரியர்கள் அமைவார்களாயின்-அவர்களும் தங்கள்


  • தினமணி 5-9-91. ஆசிரியர்கள் பொறுப்பு, கட்டுரை