பக்கம்:கல்வி எனும் கண்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பல்கலைக் கழகங்கள்
59
 


இவ்வாறு பயின்று, பட்டம் பெறுதல் உத்தியோகம் பெறுவதற்காகவே என்ற எண்ணமும் மக்கள் மனத்தில் உண்டாகக்கூடாது. உத்தியோகத்தைப் பட்டப்படிப்புடன் இணைத்துப் பார்க்கலாகாது என முன்னரே சுட்டியுள்ளேன். நான் மேநிலைப் பள்ளியில் சுட்டிக்காட்ட இருப்பதுபோன்று அங்கே தனியே அமைந்துள்ள கல்வி முறையில் பயின்றோரே அரசாங்க, பிற உத்தியோகப் படிப்பினைக் கற்றவரே அரசாங்கத்தும் பிறவிடத்தும் உத்தியோகம் பெறத்தக்கவர். பின் அவரவர் பணியாற்றும் நிலைக்கேற்ப வேறு தேர்வுகளில் (Departmental test) வெற்றிபெற்றுமேலே உயரலாம். இந்த நிலையில் கல்லூரியின் கனம் குறையும். அரசின் பணமும் மிச்சமாகும். சமுதாயமும் வீண்பொழுதில் காலம் கழித்தோம் எனக் கவலைப்படவேண்டி இருக்காது. இந்த வகையில் பல்கலைக்கழகங்களை உடனே திருத்தி அமைத்தல் அவற்றை உருவாக்கும் மாநில அரசுகளின் கடமையாகும் என உணர்ந்து அவை செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

சாந்துணையும் கல்லாத வாறு

(குறள்)

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து

(நாலடியார்)