பக்கம்:கல்வி எனும் கண்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கல்வி எனும் கண்


பாடங்க்ள் அமைய வேண்டும். எப்போதோ ஆங்கிலேயன் அமைத்த பாடத் திட்டத்தை, அவன் சென்று ஐம்பது ஆண்டுகள் ஆன நிலையிலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தேய்ந்து அழிவது நியாயமாகுமா? நான் மேலே காட்டியபடி பாரதியார் வருந்திச் சொல்லிய-ஆரியர்க்கிங்கு அருவருப்பாவதை-இன்றும் நாம் எதற்குக் கொள்ள வேண்டும் இக்கல்வி கற்கத் தன்னைத் தந்தையார் அனுப்பிய நிலையினை அவர் மிகுந்த கவலையோடு உதாரணம் காட்டி விளக்குகிறார். .

‘புல்லை உண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும் ஊன்விலை வாணிபம்
நல்லதென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடுவிப்பது போலவும்’

அது அமைந்தது என்கிறார். இன்று மனிதன் நிலை மாறிவிட்டாலும், முதலில் காட்டிய உவமை இன்னும் உண்மை யாகத்தானே உள்ளது. எனவே கல்வியில், அதுவும் பேரேரி யாகிய இந்தப் பிரிவில் பெரும் மாற்றம் தேவை.

பொறியியல், மருத்துவமும் முதலியன பயில விரும்புபவருக்கும், பிற விவசாயம், கால்நடை மருத்துவம் போன்ற துறைகளுக்கும் வாணிபம், பொருளாதாரம் போன்றவற்றிற்கும் வானிலை ஆய்வு போன்ற அறிவியல் காண்பதற்கும் கலை, இலக்கிய நலம் காண்பதற்கும் எனப் பல வகையில் இந்த இரண்டாண்டுக் கல்வி பிரிக்கப் பெறல் வேண்டும். அரசாங்கப் பணி ஏற்போர், ஆசிரியராக விரும்புவோர் போன்றோருக்குத் தனி வகைக் கல்வி அமைந்தமை போன்று (இன்று ஆசிரியப் பயிற்சி எடுக்கப் பெற்றது. இடைநிலை ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள் அனைத்தையும் மூடி, முன்போன்று இந்த வகுப்புகளிலே அப்பயிற்சி அமைக்க வேண்டும்.) இந்த விரிவாக்கங்கள் செயல்பட உடன் வழி வகைகள் காண வேண்டும். இத்தகைய பிரிவுகள்