பக்கம்:கல்வி எனும் கண்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கல்வி எனும் கண்



பெறத் தொடங்க, தமிழ்நாட்டில் அந்த அலையும் வீசத் தொடங்கியது. மேலும் அன்று தொட்டு அடிக்கடி அரசுகள் மாறும் நிலை உண்டாயின. அந்த மாற்ற நிலையில் ஒவ்வோர் அரசும் தாம் தாம் ஏதேனும் கல்வியில் மாற்றம் காணவேண்டும் எனக் கருதித் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரும் மாற்றங்கள் செய்து வந்தன.

ஆங்கிலேயர் 1931 வரையில் வகுத்த பாடத்திட்டத்தில் ஆரம்பக்கல்வி ஐந்து ஆண்டுகளும் (1-5), இடைநிலைக்கல்வி மூன்று ஆண்டுகளும் (6-8), உயர்நிலைக்கல்வி மூன்று ஆண்டுகளும் (9-11) அமைய, பள்ளிகளும் அதற்கேற்ப அமைந்தன. இடையில் உள்ள மூன்று வகுப்புகளையும் ஆரம்பப் பள்ளியோடு இணைத்து, உயர்தர ஆரம்பப் பள்ளியாகவும், உயர்நிலைப் பள்ளியாக அமைத்து இடைநிலைப் பள்ளி அல்லது இடைநிலை வகுப்பு எனவும் இயங்க வைத்தனர். தனியாக இடைநிலைப்பள்ளிகளும் (Middle schools) இருந்தன. இரண்டிற்கும் சற்றே பாடத்திட்டத்தில் மாற்றம் இருந்த போதிலும் யாவரும் மேலே கல்வியைத் தொடர வாய்ப்பு இருந்தது. பெருநகரங்களில் உயர்நிலைப் பள்ளிகள் இயங்க, பேரூர்களில் உயர்தர ஆரம்பப் பள்ளிகள் அமைய, நாட்டுக்கல்வி வேறு யாதொரு மாறுபாடுமின்றி, நல்ல பாடமுறையில், சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் கீழும் அரசாங்க அரவணைப்பிலும் சிறக்க விளங்கின.

ஆங்கிலேயர் வகுத்த கல்வி முறை மாறவேண்டும் என்று நான் மேலே குறித்துள்ளேன். அந்தக் காலத்தில் இந்த முறை இருப்பினும், அன்றிருந்த இந்நாட்டு ஆசிரியர்களும் மேதைகளும் சில நல்லாய்வுகளை வகுத்துப் பாடங்களையும் பயிற்றுகிறவர்களையும் நல்ல முறையில் தேர்ந்தெடுத்தனர் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

1991 வரையில் 6 முதல் 11 வகுப்புகள் ‘பாரம்’ (Form) என்ற பெயரோடு உயர்நிலைப்பள்ளிகளில் இயங்கின. (உயர்தர ஆரம்புப் பள்ளிகளில் வகுப்பு என்ற பெயரிலேயே