பக்கம்:கல்வி எனும் கண்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இடைநிலை–உயர்நிலைப் பள்ளிகள்
73
 


பயிலாமலே உயரிய டாக்டர் பட்டம் பெறும் நிலை இருக்க 'இந்திய ஒருமைப்பாடு’ என்று வானொலி, தொலைக்காட்சிகள் தினம் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய நெறியில் இளநெஞ்சங்களை ஈர்க்கும் பாடத்திட்டம் இல்லாமையும், 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற அடியே இல்லாது ஒளவையாரைக் கொலை செய்யும் தமிழ் வளர்ச்சியும், தமிழில் எம்.ஏ., படித்தும் நான்கு வரிகள் தவறின்றித் தமிழ் எழுத முடியாத நிலையும், இவைபோன்ற பிறவும் பாரதி காணின் "ஐயோ! இதற்கா நான் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பள்ளுப் பாடினேன்' என்று அவதியுற்றுக் கலங்குவார். அதுமட்டுமல்ல. பாடத் திட்டத்தில் தன் ஊர், தன் மாவட்டம் பற்றி அறியவிடாமல் உலக நாடுகளைப் பற்றியும் பிற வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றியும் இளஞ்சிறுவர் படிக்க இருக்கும் இன்றைய நிலையினைக் கண்டு நல்லவர் உள்ளம் வருந்தாதிருக்க முடியுமோ!

அன்று ஆங்கில மோகமும் ஒருமைப்பாட்டு உணர்வு இன்மையும் இருந்த போதிலும், பிற வரலாறு, நிலநூல், கணிதம் போன்ற பாடங்களிலும் ஊர் ஆட்சி போன்ற பாடங்களிலும் (civics) மாணவர் தரத்துக்கும் வகுப்பிற்கும் ஏற்ப மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நன்கு அமைந்திருந்தன. தெய்வநெறி போற்றும் மரபும் அக்காலத்தில் போற்றப்பட்டது. கல்லூரி, பள்ளிகளில் தமிழ்ப் பாடநூல்களில் முதலில் கட்வுள் வாழ்த்து அமைந்தே பிறகு அறம், இலக்கியம் போன்றவை இடம் பெற்றன. இன்றோ நாட்டுணர்வு மட்டுமின்றி இறைஉணர்வும் சமுதாய உணர்வும் தன் ஊர் உணர்வும் நாட்டு உணர்வும் இல்லா வகையிலேயே பாடநூல்க்ள் அமைகின்றன. ஆளும் கட்சிகள் தத்தம் தலைவரைப் பற்றிய பாடங்களுக்கு முதலிடம் தருகின்றனவே ஒழிய, சமுதாய வாழ்க்கை நெறி விளக்கத்துக்கு இடம் தருவதில்லையே. இப்படி எவ்வளவோ சொல்லலாம். நிற்க,

அடிக்கடி ஆட்சிமாறும் போதெல்லாம் ஒவ்வொருவரும் ஏதாவது கல்வியில் மாற்றம் செய்ய விரும்புவதாலேயே