பக்கம்:கல்வி எனும் கண்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
76
கல்வி எனும் கண்
 


சென்ற பிரசோற்தியில் (1931) மாறுபட்ட பாதை அறுபது ஆண்டுகள் கழித்து இந்தப் பிரசோற்பத்தியில் (1991) நேரிய பாதையில் திரும்புமா?

1981ஆம் ஆண்டு வரை அந்த நிலை இருந்தது. இரு விருப்பப்பாடங்கள் அந்தப் பள்ளி வகுப்பிலேயே அக்காலத்திய மாணவர்கள் தேர்ந்தெடுத்த காரணத்தால் மேல் இடை நிலை வகுப்புக்கு வரும்போது, தாம் பயின்ற விருப்பப் பாடங்களுக்கு ஏற்ப, மூன்று பாடங்களை-வருங்கால வாழ்வுக்கு வழி அமைக்கும் வகையில்-தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தது. தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அத்தகைய பாடங்களைப் பயில்வதால், மேல் தாம் சேர இருக்கும் பொறியியல் போன்ற வகுப்புகளுக்கு அம் மாணவர் முற்றும்தகுதி உடையவராய்-நன்கு பயின்று வெற்றிபெற வாய்ப்பு உள்ளவராய்-தம் வாழ்வினை அறுதியிட்டு அமைத்துக் கொள்ளும் திறன் உடையவராய் விளங்கினார்கள்.

1931-க்குப் பிறகு அப்போது வந்த புதிய அரசு மாற்றங்களைச் செய்தது. விருப்பப் பாடம் ஒன்றாயிற்று. வேறு பல மாற்றங்களும் நிகழ்ந்தன. அன்றுதொட்டு இன்று வரையில் தமிழகக் கல்வி எடுப்பார் கைப்பிள்ளையாய் ஏங்கும் வகையில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. பழைய முறையில் மாநில மேற்பார்வை வகுத்து, மாவட்ட, வட்ட அளவில் கல்வியைக் கருத்துடன் கவனிக்கும் வகையில் நேரிய முறையில் ஆக்க நெறிக்கு வழிவகுப்பின் நலம் உண்டாகும் என நம்புகிறேன். விருப்பப்பாடமாக இன்று +2 எனும் இரு வகுப்பிலும் இருப்பதற்கு முன், கீழே ஒன்பதாம் வகுப்பிலேயே இந்தப் பாடங்களை மாணவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிப்பின் பயன் விளையும் எனவும் நம்புகிறேன்.

இன்று மாணவர்களுக்குத் தேவையற்ற பாடங்களும் அதற்கெனப் பாடநூல்களும் குறிப்பேடுகளும் (Work book) என்று செயலுக்கெனத் தனி நூல்களும் அதிகமாகத் திணிக்கப் பெறுகின்றன. அவற்றைச் சுமப்பதற்கும்கூட மாணவர்