பக்கம்:கல்வி எனும் கண்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைநிலை–உயர்நிலைப் பள்ளிகள்

77



இயலாது வருந்துவர். மாணவர்களுக்கு முறைப்படி பாடங்களை நடத்தி, தக்க கேள்விகளுக்குப் பதில் காட்டி, அவர்களையும் காணுமாறு செய்யும் முறை அமையின் சிறந்த பயன் விளையும்.

பழங்காலத்தில் மனப்பாடம் செய்யும் மரபு இருந்தது. இது பற்றி முன்னமே நான் குறிப்பட்டேன். கீழ்வாய் இலக்கமும் வாய்பாடும் மனப்பாடம் செய்தவர்கள் எத்தகைய கணக்கினையும் மனத்திலே கணக்கிட்டு விரைந்து விடை காண்பர். அப்படியே பல்வேறு இலக்கியங்களை மனப்பாட்ம் செய்வதால் அவர்தம் பேச்சும் எழுத்தும் சிறக்க அமையும். ஆயினும் வெறும் மனப்பாடம் செய்வதில் மனித ஆற்றல் வீணாகக் கழியவேண்டுமா எனக் கற்றவரும் கருதுகின்ற ஒரு காலத்தில் நாம் நிற்கிறோம். நம்மிலும் பலகோடி மடங்கு நினைவாற்றல் உடைய கணிப்பொறிமுன் மனிதனுடைய நினைவாற்றல் தேவையற்றது என்பர். பெருக்கல் கூட்டல் போன்றவற்றிற்கு மின் அணுக் கருவிகள் வந்துள்ளமையின் வாய்பாடு மனப்பாடமும் தேவை இல்லை என்பர். இந்த வாதங்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பினும், இந்தப் புதிய சாதனங்களும் பொறிகலங்கி மயங்கிவிழும் நிலையில் தவறு நடப்பது போன்று மனிதனுடைய நினைவாற்றலில் தவறு உண்டாகாது என்றும் அதனாலேயே பல சாத்திரங்களும் தோத்திரங்களும் காலத்தை வென்று வாழ்கின்றன என்றும் கூறுவர். காலம்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

இன்று உயர்தர ஆரம்பப்பள்ளிகள் இல்லை என எண்ணுகிறேன். 6ஆம் வகுப்பிலிருந்தே உயர்நிலைப் பள்ளிகள் நடைபெறுகின்றன. இந்தப் பள்ளிகள் நான் மேலே கூறியபடி, தமிழ்நாட்டில் பல வகையில், பல பாட முறைகளில் நடைபெறுகின்றன. இவை நிறுத்தப்பெறல் வேண்டும். மாநிலத்தொடு இருந்த கல்வியினை மத்திய அரசும் பங்கு போட்டுக்கொண்டு, அதன் பள்ளிகளை ஊர்தொறும் நிறுவி