பக்கம்:கல்வி எனும் கண்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இடைநிலை–உயர்நிலைப் பள்ளிகள்
79
 


பிரித்துள்ளனர். தாய்மொழியை மேல்மட்டமாகக் கொண்டவர் மற்றொன்றினைக் கீழ்மட்ட நிலையில் கொள்ளலாம். இரண்டிற்கும் பாட அமைப்பில் வேறுபாடு உள்ளது. கீழ்மட்டம் சற்றே எளிதாகப் பயிலும் வாய்ப்பு உடையது. இந்த முறையினால் மராத்தியர் மராத்தியினைக் கட்டாயமாக மேல்மட்ட்த்தில் படிப்பதுடன் மற்றொரு மொழியினைக் கீழ்மட்டத்தில் கட்டாயம் படிக்கவேண்டும். அங்கே உள்ள தமிழர்கள் தமிழை மேல்மட்டத்தில் கற்றால் மராத்தியினைக் கீழ்மட்டத்தில் பயிலலாம். அன்றி வேறு மொழியினை மேல்மட்டமாகக் கொண்டாலும் தமிழைக் கீழ்மட்டத்திலாவது பயிலவேண்டும். இவ்வாறு அங்குள்ள தமிழர் தமிழைக் கட்டாயம் பயில வகை இருக்கும்போது, தமிழநாட்டில் தமிழ் வாசனை இல்லாமலேயே எல்லாப் படிப்பினையும் படிக்கலாம் என்பது நாட்டார் நகை செய்யத் தக்கதன்றோ! தமிழ் மட்டுமன்றி மராத்தி நாட்டிலுள்ள தெலுங்கர்,கன்னடியர், குஜராத்தியர் ஆகியோருக்கும் இந்த நிலை உண்டு. கூடவே ஆங்கிலமும், இந்தியும் இவ்வாறே பகுக்கப்பெற்று உள்ளன என எண்ணுகிறேன். (திட்டமாக நினைவில்லை) எனவே தமிழக அரசு இந்த வகுப்புகள் (6-10) ஏதேனும் மூன்று வகுப்புகளிலோ அன்றி ஐந்து வகுப்புகளிலோ தமிழைக் கட்டாயமாக்கி விரைவில் செயல்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

இன்னும் பல மாற்றங்கள் இந்த வகுப்புகளில் செய்ய வேண்டியுள்ளன. அவற்றை அவ்வத்துறையினர் ஆராய்ந்து, தெளிந்து அரசுடன் கலந்து முடிவெடுத்து ஆவன காணலாம். என் சில நூல்களில் இவை பற்றி முன்னரே குறித்துள்ளேன். நான் அங்கம்வகித்த சில குழுக்களிடையேயும் அவை பற்றிக் கூறியிருக்கிறேன். இன்று அத்துறையினைப் போற்றும் கல்வி அமைச்சர், செயலர் போன்றவர்களும் முதல்வர், நிதி அமைச்சர் போன்றவர்களும் என்னைக் காட்டிலும் கல்வித் துறையில்-ஆரம்ப முதல் பல்கலைக்கழகம் வரையில் பலப்பல சீர்திருத்தங்களை-மாற்றங்களைச் செய்யத் தீவிரமாகச்