பக்கம்:கல்வி எனும் கண்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கல்வி எனும் கண்



செயல்திட்டங்கள் தீட்டி வருகின்றனர் என நாளிதழ்கள் வழி அறிகிறேன். எனவே தற்போது இந்த அளவோடு இது பற்றி அமையும் என எண்ணி நிற்கின்றேன்.

கல்வியில் மொழி பற்றிய சர்ச்சையே வளாந்துகொண்டு இருக்கிறது. பல மொழி பேசும் நாட்டில் ஒரு மொழியினைக் கட்டாய்மாகத் திணிப்பது தவறுதான் என எல்லாரும் உணருகின்றனர். அரசியல் சாசனத்திலே தலைவர் தம் தனிவாக்கினால்-ஒருவாக்கு அதிகமாகப் பெற்றமையால் இந்தி நாட்டு மொழியாக இடம்பெற்றது. ஆயினும் அதைப் பரப்ப வடநாட்டு இந்தி பேசும் மக்களினமும் அவரைச் சார்ந்த மத்திய அரசும் பெருமுயற்சிகளை அன்று முதல் மேற்கொண்டு வருகின்றன.

நாட்டில், மும்மொழித்திட்டம் 1956இல் புகுத்தப் பெற்றது. ஆனால் மும்மொழித் திட்டத்தில் வடமொழியாகிய சமஸ்கிருதம் இடம் பெறவில்லை என்பர். மத்தியப் பள்ளிகளிலும் பிறவிடங்களிலும் மும்மொழியில் ஒருமொழியாக இது அமைகிறது. வடமொழியை யாரும் குறைத்து மதிப்பிட வில்லை. ஆயினும் அந்தந்த மாநில மொழிகள் கட்டாயம் இல்லாதபோது வேறு எந்த மொழியும் கட்டாயம் ஆக்கப் பெறுவது தவறு என்பதை இன்னும் சிலர் உணராமையினையே எண்ண வேண்டியுள்ளது. நாட்டு ஒற்றுமைக்காக அமைய வேண்டிய மொழி நாட்டையே துண்டாக்குமோ என்று அஞ்ச வேண்டிய் நிலையில் நாடும் நாமும் சென்றுகொண்டிருக்கிறோம். மும்மொழித் திட்டம் கொண்டுவந்தபோது தென்னாட்டில் உள்ளவர்கள், வடநாட்டு இந்தியினைப் பயில, வடநாட்டில் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு தென் இந்திய மொழியினைப் பயில்வார்கள் என்ற ஏற்பாடு இருந்தது. ஆனால் தமிழ்நாடு நீங்க, எல்லாத் தென்மாநிலங்களும் இந்தியைக் கட்டாயமாக வளர்த்துவர, வடமாநிலங்களில் தென்னாட்டு மொழி ஒன்று கட்டாயமாக்கப் பெறவில்லையே வடமாநிலங்களில் அரசாங்க அலுவலகங்களில் அவரவர் தாய்மொழி-இந்திதான் உபயோகிக்கப்படும் என்று சட்டம்