பக்கம்:கல்வி எனும் கண்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

கல்வி எனும் கண்தெங்கே? மேலும் ஓர் ஆசிரியருக்கு 50, அல்லது 55 மாணவர். அதிலும் இரண்டு, மூன்று, ஐந்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இருப்பின் எந்த வகையில் அவர்கள் கற்றுத் தர முடியும்?

இப்போது 1995க்குள் பதினான்கு வயதுக்கு உட்பட்ட எல்லாப் பிள்ளைகளுக்கும் கட்டாயக் கல்வி தரப்பெறும் என்கின்றனர். நம் சட்ட சபையில்கூட இந்த ஆண்டு இத்தகைய நல்ல கொள்கை பேசப்பெற்றது. ஆனால் கீழ் உள்ளவர்கள் செயலாற்ற வேண்டுமே அந்தந்த ஊரில் படித்த பெரியவர்களைக் கொண்டு, குறைந்த செலவில் பள்ளிகள் அமைத்து, பிள்ளைகளை வகுப்பு வாரியாகப் பிரித்துப் படிக்க வைத்தால் பயன் விளையும். வீதிதோறும் இரண்டொரு பள்ளி என்று பாரதி பாடினான். இன்று நகரங்கள்-பெரும் கிராமங்களில் வீதிதோறும் இரண்டொரு பள்ளி வந்துள்ள நிலை காண்கிறோம். ஆனால் அங்கே தமிழுக்கு இடமில்லை. ஆணை செலுத்துவது ஆங்கிலம். அப்பள்ளிகளும் வாணிப வகையில் செயல்படுகின்றன. இந்த அவல நிலையை அரசாங்கம் போக்க வேண்ட்ாமா! இதற்குக் காரணம் நாமே, ஆம் பாரதி

'மெல்லத் தமிழ் இனிச்சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவியிசை ஓங்கும்’

என்று 'கூறத் தகாதவன் கூறியதாகத்' தமிழன்னை வாய்மொழியாகவே காட்டுவர். இன்று:இந்த நிலையினைத் தானே காண்கிறோம். மேலே ஆறாம் வகுப்பிலோ வேறு வகுப்பிலோ ஆங்கிலம் ஒரு மொழியாக ஆங்கிலேயர் காலத்திலே இருந்த நிலைமாறி-இன்று சுதந்திரம் பெற்ற நாற்பத்தைந்து ஆண்டுகள் கழித்து, அந்த ஆங்கிலமே வீட்டு மொழியாக-வீதியில் பேசும் மொழியாக-விதி தோறும் உள்ள பள்ளி மொழியாக இயங்குகிறது. இதில் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது என்பர். வெளி நாட்டார் ஒருவர் இந்தியாவைக் காண வந்தால், 'இங்கே