பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பேராசிரியர்கா. ம. வேங்கடராமையா

குலோத்துங்க சோழன் காலத்திலும், கும்பகோணம் வட்டம் முன்னியூர் திருவகத்தீஸ்வர முடையார் கோவிலின் தெற்கில் திருமடை விளாகத்தில் மூன்றாம் இராச ராசன் காலத்தில் 'திருஞானசம்பந்தன் குகை இருந்தமையைக் கல்வெட்டுக் கூறும்."

திருமுறை தேவாரச் செல்வன் குகை

மூன்றாம் இராசேந்திரனின் நான்காம் ஆட்சி ஆண்டுக்குரிய (கி.பி.1250) திருவிடைவாய்க் கல்வெட்டு, திருக்கழுமலத்தில் திருத்தோணிபுரமுடைய நாயனார் கோவிலில், “திருமுறை தேவாரச் செல்வன் குகை' என்ற குகை இருந்ததனைக் கூறுகிறது." இக்குகை முன்னியூரில் உள்ள மூன்றாம் இராசராச சோழனது இருபத்தேழாவதின் எதிராமாண்டு (1244க்குரிய) கல்வெட்டிலும் குறிக்கப் பெறுகிறது."

காழிக் கற்பகக் குகை

மேற்படி முன்னியூர்க் கல்லெழுத்தில், “காழிக் கற்பகம் குகை' என்று ஒரு குகை பேசப் பெறுகிறது. இக்குகை திருமுறை தேவாரச் செல்வன் திருமடத்துத் தலைவரால் நிறுவப்பெற்றது. 'காழிக் கற்பகம்' என்பது ஞானசம்பந்தரைக் குறிக்கும்.

“தண்புனல் விளைவயல் காழிக் கற்கபம்

நண் புனர் அருமறை ஞான சம்பந்தன்'

என்பது திருப்பைஞ்ஞ்லித் திருப்பதிகப் பகுதி.

முதல் இராசராசனுடைய 27ஆம் ஆட்சியாண்டுக்குரிய அல்லூர்க் கல்லெழுத்தில், 'திருவெண்ணாவல் பூந்தோட்டத்தில் பெருந்திருவமிர்து செய்தருள வசக்கின நிலன் பூரீ யாழிக் கற்பகம் அரைமா என்ற பகுதியால் இத்தொடர் ஒரு நிலத்தின் பெயராக அமைந்தமை அறிய வருகிறது".