பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

முதற் குலோத்துங்கனுடைய 49ஆம் ஆண்டுக்குரிய திருமாணிகுழிக் கல்வெட்டு, “உதவி திருமாணிகுழி உடைய மகாதேவர் கோவில் திருமடை விளாகத்தில் ரீகாழி நாடுடையான் திருமடம்' என்னும் மடம் இருந்தது' என்று கூறும். இது ரீகாழி நாடுடைய பிள்ளையார் திரு மடம் எனவும் கூறப்படுகிறது".

திருவோத்துருடைய மஹாதேவர் தேவதானங்களுள் ஒன்றாக, “பூரீகாழி நாடன் விளாகம்' என்னும் பகுதி மூன்றாம் குலோத்துங்கனின் 33ஆம் ஆண்டுக் கல்வெட்டில் உள்ளது".

பூம்பாவை வழிபாடு

சம்பந்தர், சித்தம் அன்புறு சிவநேசர்பால் திருவருள் கொண்டு, மயிலை கபாலிச்சர மதிற்புறத்தே பூம்பாவையின் எலும்பினை மட்டிட்ட புன்னையங்கானல் எனும் பதியம் பாடிப் பெண்ணாக்கினர். இப்பூம்பாவை மயிலையில் வழிபடப் பட்டமையைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு உரிய எழுத்தமைதி கொண்ட விருபாகூrஸ்வரர் கோவிலில் உள்ள பாண்டிய வேந்தன் கல்வெட்டொன்று' 'திருப்பூம்பாவை உடைய நாயனாரைக் குறிக்கிறது. செயின்ட் தாமஸ் மவுண்ட் ஹோலி அப்பாஸ் கான்வெண்டில் உள்ள துண்டுக்கல்வெட்டு" ஒன்று, திருமயிலாப்பூரில் உள்ள பூம்பாவைக்குக் காசு, கடமை, நல்லாயம் முதலியற்றில் இருந்து விலக்களிக்கப் பெற்றதனைக் கூறுகிறது.

கொத்தலர்குழலி

"கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு

குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியு நாக முடிமேலணிந்தென்

உளமே கவர்ந்த அதனால்