பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 21

புத்தரொ டமனை வாதிலழிவிக்கு மண்னல்

திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியா ரவற்கு மிகவே' என்பது கோளறு பதிகத்தின் இறுதிப் பாடல். தில்லையில் உள்ள கோப்பெருஞ்சிங்கன் காலக் கல்லெழுத்துக்கள் மூனறனுளு “பிராமணி அம்பலத்தமுது கொத்தலர் குழலி' எனறு ஒருத்தி குறிக்கப் பெறுவள். இவள் பெரும் பற்றப் புலியூர்ப் பெரும் கவுசியன் திருக்காழிப் பாலையுடையான் இரவி என்பவன்

மனைவி ஆவள்.

நாறுசாந்தினமுலை

"துறுசேர் சுடலையிற் சுடரெரி

யாடுவர் துளங்கொளிசேர்

நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண்

பிறைபுல்கு சடை முடியார் நாறுசாந் திளமுலை அரிவையோ

டொருபகல் அமர்ந்தபிரான் வீறுசேர் துருத்தியார் இரவிடத்

துறைவர் வேள் விக்குடியே"

என்பது 'ஓங்கிமேல் உழிதரும் ஒலி புனல்' என்னும் திருப்பதிகத்தின் இரண்டாம் பாடல், இப்பாடலடிப்படையாக, காமக் கோட்டமுடைய நாச்சியார் நாறு சாந்திள முலை நாச்சியார் எனக் கல்வெட்டுக்களில் கூறப்படுகிறார்." திருத்துருத்தியுடையார், வீங்குநீர்த்துருத்தியுடையார், சொன்ன வாறறிவார் எனக் கல்வெட்டுப் பகுதி' 'பைம் பொழில் சூழ் வீங்குநீர்த்துருத்தியார் இரவிடத் துறைவர் வேள்விக்குடியே என்னும் முதற்பாடற் பகுதியை நினைப்பூட்டுவது ஆகும்.