பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 23

வென்றான் மடத்தில் திருவிழாச் சேவிக்க வந்த மாகேசுவரர்க்கு உணவூட்டுவதற்குக் கொடுக்கப் பெற்ற நிலக்கொடையைக் குறிக்கிறது’. தனினின்று வென்றான் என்பது ஞானசம்பந்தரைக் குறிப்பதாகலாம். ஒரு பக்கம் எண்ணாயிரம் சமணமுனிவரும் அவர்களை எதிர்த்துத் தனியாக நின்று சமணர்களை வென்றமையால் திருஞான சம்பந்தரைத்

தனினின்று வென்றான் என்று கூறல் தகும்.

இளவெண்மதி சூடினான்

திரு அறையணிநல்லூர் என்பதும் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று: பெண்ணையாற்றின் கரையில் உள்ளது; இந்நாளில் அரகண்டநல்லூர் என்று வழங்கப் பெறும் இத்தலப் பதிகப் பாடலுள் ஒன்று பின் வருமாறு:

"பீடினால் பெரியோர்களும் பேதமை கெடத் தீதிலா

வீடினால் உயர்ந்தார்களும் வீடிலார் இள வெண்மதி சூடினார் மறை பாடினார் சுடலை நீரணிந்து ஆரழல் ஆடினார் அறையணிநல்லூர் அங்கையால் தொழு வார்களே."

இப்பாடலில் இறைவன் 'இளவெண்மதி சூடினார் என்று குறிக்கப் பெறுகிறார். இப்பெயர் இவ்வூர்க் கல்லெழுத்தில் ஒருவனுக்குப் பெயராக வந்துள்ளது. அவ் வீர வரலாறு வருமாறு:

இவ்வூரில் நீண்ட காலமாக ஒரு மண்டபம் முற்றுப் பெறாமல் இருந்தது. ஒருவன் இம் மண்டப வேலை நிறைவுற்றால் என்னுயிரைப் பலியாகக் கொடுப்பேன் என்று பிரார்த்தனை செய்து கொண்டான். மண்டப வேலை முடிவுற்றது. அவன் தன்னுயிரைப் பலி கொடுத்தான். இவ் வீரச் செயலைப் பாராட்டி அவன் சந்ததியார்க்கு 1000 குழி நிலம் உதிரப்பட்டியாகக் கொடுக்கப் பெற்றது. உயிரை ஈந்தவன் பெயர் இள வெண்மதி சூடினான் என்பது அக் கல்வெட்டிற்

-- ந33 கனடது.