பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 25

ஆளுடையபிள்ளை வழிபாடு

மாசி வைகாசித் திருவிழாக்களின்போது ஆளுடைய பிள்ளையார் திருமேனி திருவடதுறையில் இருந்து திருமாறன் பாடிக்கு எழுந்தருளும். இவ்வாறு எழுந்தருளுங்கால் இவருக்கு அமுது செய்தருளவும், பட்டைப் பொதிசோறு வழங்கவும் சேக்கிழான் பாலறாவாயன் ஆயின களப்பாள ராசன் மூன்றாம். இராசராசனின் 19ஆம் ஆண்டில் நிவந்தம் தந்தான்." திருவிடை வாய்த் திருப்பதிகம்"

'பண்புற்ற திருஞானசம்பந்தர் பதிகம் முன்னுாற்று எண்பத்து நான்கு" என்பது திருமுறை கண்ட புராணம். ஆனால் அச்சிட்ட நூல்களில் காணப்பெறுபவை 383. ஆனால் திருவிடைவாய் என்னும் ஊரில் சாசனமாக இருந்த சம்பந்தர் பதிகம் 1918இல் படி எடுக்கப்பட்டுள்ளது. இது, "மறியார் கரத்தெந்தை எனத் தொடங்குவது. பதினொரு பாடல்களை

உடையது.

திருஞானம் ஒதுதல்

திருநெல்வேலி மாவட்டம் திருவாலிசுவரம் என்ற தலத்திலுள்ள சிவாலயத் திருமதில்களில், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியனது 3ஆம் ஆட்சியாண்டில் அமைந்த சாசனம்' ஒன்றில், “திருஞானம் விண்ணப்பம் செய்வதற்குச் சிவப்பிராமணர் எண்மர் கோளகிமடத்து ஞானாமிர்தாசாரிய சந்தானத்தைச் சார்ந்த புகலிப் பெருமாள் என்பாருடன் உடன்படிக்கையின் பேரில் நிலம் விற்றனர்' என்று வரையப்பெற்றுள்ளது. இதனால் சிவப்பிராமணர் திருஞானம் விண்ணப்பித்தனர் என்று அறியலாம்.

திருநெல்வேலித் திருக்கோயிலில் திருஞானம் ஒத விக்கிரமசோழதேவர் கண்ட தவசிகளில் பதினொருபேர்க்கும் அவர்கள் வர்க்கத்தில் திருஞானம் ஒதும்பேர்க்கும் பதினொரு மனைகள் யாண்டு 15ஆவது முதல் மடம் எடுத்திருக்கக்