பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 27

தலை ஞாயி(று) என்னும் இடத்தில் உள்ள மூன்றாம் இராசேந்திரனுடைய 3ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும்" இவ்வரசனது 23ஆம் ஆட்சியாண்டுக்குரிய (கோவிலூர்) திருவுசாத்தானக் கல்வெட்டும்" சம்பந்தரைத் திருஞானம் பெற்ற பிள்ளையார் எனக் குறிப்பிடுகின்றமையின் இவ்வையம் பின்னும் மிகுகின்றது. ஆனால் சம்பந்தர் முதலிய மூவர் அருளிய தேவாரத்தைக் காழித் தாண்டவராயர் என்பார், தாம் எழுதிய திருவாசக வியாக்யானத்தில், திருமெய்ஞ்ஞானத் திருநெறித் தேவாரம் என்றும், திருமெய்ஞ்ஞானத் திருநெறித் தமிழாகிய தேவாரம் என்றும் கூறியுள்ளமையால் திருஞானம் என்பது மூவர் தேவாரத்தையே குறித்ததாகக் கொள்ளலாம்.

பூழியர்கோன் வெப்பொழித்த

புகலியர்கோன் கழல் போற்றி!

அடிக்குறிப்புகள்

1. தருமபுரம் ஆதீனம், இரண்டாம் திருமுறை. வரலாற்றுப்

பகுதி, பக்கம். எண்.65.

2. தென்னிந்தியக் கோயிற்சாசனங்கள். தொகுதி - 3. பகுதி -

பக்க எண், 1320.

3. பின்னிணைப்புக் காண்க.

4. South Indian Temple INS Vol. III Part II Pages 1303 — 25.

5. A. R. No 120 of 1888, பெருந்தொகை 1059 - 1094

6. A. R. No 369 of 1921; பெருந்தொகை 1095 - 1119.

7. சுந்தரர்தேவாரம் திருக்கோலக்கா, 8.

8. புதுக்கோட்டைச் சாசனங்கள் 319

9. இலக்கியக்கேணி - 48 - 56 பக்கங்களைக் காண்க

10, 152 of 1903, S - || – |. Vol. Wii. No. 440.

11. புதுக்கோட்டைச் சாசனங்கள் - எண். 393.