பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

2. திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசரைப் பற்றிக் கல்வெட்டுக்களினின்று அறியப்படுவனற்றுள் சில காண்போம்.

பெயர்: திருநாவுக்கரையர் என்றும் வாகீசர் என்றும் இவர் குறிக்கப்படுகிறார். தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பெற்றதும் முதல் பூரீ காரியம் ஆராய்கின்ற அலுவலனாகத் திகழ்ந்தவன் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான். இவன் தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளுவித்த பிரதிமங்களுள் ஒன்று திருநாவுக்கரையர் பிரதிமம்.'

தஞ்சைப் பெரிய கோயிலில் முதல் ராஜராஜனது 29ஆம் ஆட்சியாண்டில் (கி. பி. 1014ல்).

'உடையார் பூநீராஜராஜீஸ்வர முடையாருக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்ய உடையார் நீராஜராஜதேவர்

குடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண்மர்'

என்று ஒரு கல்வெட்டில் உள்ளது. இந்நாற்பத்தெண்மருள்,

8 பேர் திருநாவுக்கரையர் பெயரைப் பூண்டிருந்தனர் என்பது

அக்கல்வெட்டால் அறியப்பெறுவதுள் ஒன்று.

முதற்குலோத்துங்கன் காலத்திலும், அவன் மகன் விக்ரம சோழன் காலத்திலும் படைத்தலைவனாகத் திகழ்ந்தவன் மணவில் கூத்தன் காலிங்கராயன் எனப் பெறுவான். இவன் தில்லையிலும் திருவதிகையிலும் செய்த திருப்பணிகள் அளப்பில. இவன் திருவதிகையில் ஆற்றிய திருப்பணிகளைத் திருவதிகை வீரட்டானத்தில் சாசனம் செய்யப் பெற்றள்ள 25 வெண்பாக்களால் அறியலாம். இவன் திருவதிகையில் திருநாவுக்கரசருக்குத் திருக்கோயில் கட்டினான்.