பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 33

கங்கை சடைக் கரந்தான்

மேற்கண்ட திருத்செந்துறைக் கல்வெட்டில் கண்ட, வாகூருடையான் சொற்றுணை என்பானுக்குக் கங்கை சடைக் கரந்தான் என்றும் பெயரிருத்தலைக் காணலாம். மேற்படி திருச்செந்துறைக் கல்வெட்டின் இறுதியில் பிற்கண்ட வெண்பா உள்ளது:

உண்ணலாம் நொய்யொடுசோ றோவாதே எப்பொழுதும் பண்ணெலாம் பாடி இருக்கலாம் - மண்ணெலாம் அகன்மாட நீடூர்கூர் கங்கை சடைக்கரந்தான் பொன்மாடத் தெப்பொழுதும் புக்கு. கங்கை சடைக்கரந்தான் என்ற பெயர் திருநாவுக்கரசருடைய “வங்கம விகடல்' என்ற தேவாரத்து,

"கங்கை சடையுட் கரந்தாய் அக் கள்ளத்தை மெள்ள உமை நங்கை அறியிற் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே' என்ற பகுதியை நினைவூட்டும்.

"கங்கைவார் சடைக்காரந்தார்க் கன்பராகில்

அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே'

என்பதும் அப்பர் தேவாரம்.

நற்றுனை

"சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுனை யாவது நமச்சி வாயவே" என்பர் அப்பர். இப்பாடலைப்போலப் பின்வருவதும்

உள்ளது.