பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

என்பது இதற்கு அகச்சான்று. இச்செய்தியை நினைப்பிப்பது போல், ஒருவர் பெயர் நஞ்சமுது செய்தான் என்பதாகும் என்று சிதம்பரத்தில் உள்ள குலசேகர தேவர் கல்வெட்டு' ஒன்று கூறுகிறது. அவரது முழுப்பெயர் பெரும்பற்றப் புலியூர் மூலப் பருவைடியாரில் வாச்சியன் திருவலஞ்சுழியுடையான் நஞ்சமுது செய்தான் என்பதாம்.

தோன்றாத்துணை

கல்லையே தெப்பமாகக்கொண்டு கரையேறிய திருநாவுக்கரசர்திருப்பாதிரிப் புலியூரில் பாடுங்கால் இறைவன் தனக்குத் தோன்றாத் துணையாய் இருந்தமையைப் பின்வருமாறு கூறியுள்ளார்.

'ஈன்றாளு மாயெனக் கெந்தை மாயுடன் தோன்றினராய்

மூன்றா யுலகம் படைத்துகந்தா னென்மனத் துள்ளிருக்க ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பாதிரி புலியூர் தோன்றாத் துணையாயிருந்தனன் தன்னடி யோங்களுக்கே" இவ்வரிய செயலை நினைவு கூரும் வகையில் இந்நாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் திருப்பாதிரிப் புலியூரிறைவனைத் "தோன்றாத் துணையாண்டார்' என்று கூறினர். கோயிலைத் 'தோன்றாத் துணையாண்டார் கோயில்' என்றும் கூறலாயினர். இதனைப் பின்வரும் கல்வெட்டுத் தொடர்களால் அறியலாகும்.

'விக்கிரம சோழதேவர்க்கு யாண்டு ஏழாவது ராஜராஜ வளநாட்டு பட்டான் பாக்கை நாட்டுத் திருப்பாதிரிப் புலியூர்த் தோன்ற ாத் துணையாண்டார் கோயில்',

விக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு ஆறவது ராஜராஜ வளநாட்டுப் பட்டான் பாக்கை நாட்டுத் திருப்பாதிரிப்புலி யூரான பரநிருபதுராக்கிரமச் சதுர்வேதி மங்கலத்துத் தோன்றாத் துணை ஆளுடையார் கோயில்',

'வீரமே துணையாகவும் என்று தொடங்கும் வீர ராசேந்திர சோழனது 5ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டினின்று