பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

நாயனார் கோயிற் பூசகர் “தருணேந்து சேகர பட்டர்' என்று ஒருவர் குறிக்கப்பட்டுள்ளார்."

என்னானைக் கன்று

போசள மன்னன் வீரராமனது திருவானைக்கா சாசனத்தில்’ திருவானைக்காவுடைய நாயனாரைப் பூசிக்கும் திருவெள்ளறைக் காச்சயபன் என்னானைக் கன்று பட்டன் என்று ஒருவன் குறிக்கப்பெறுகிறான். திருநாவுக்கரசர் திருவானைக்காவில் பாடிய திருத்தாண்டகத்தில் இறைவனை “என்னானைக் கன்று' என்று குறிப்பிட்டார். இதுவே திருவெள்ளறைக் காச்ய பனுக்குரிய பெயராயிற்று. அத்திருத்தாண்டகம் பின் வருமாறு:

முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை

மூவாத சிந்தையே மனமே வாக்கே

தன்னானை யாப்பண்ணி ஏற்றி னானைச்

சார்தற் கரியானை தாதை தன்னை

என்னானைக் கன்றினைஎன் ஈசன் தன்னை

எறிநீர்த் திரையுகளும் காவி ரிசூழ் தென்னானைக் காவானை தேனைப் பாலை

செழுநீர்த் திரளைச்சென்றாடினேனே.

செம்பொற் சோதி

'திருவையா றகலாத செம்பொற் சோதி”

என்பது திருநாவுக்கரசர் தேவார அடி. முதலாம் இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலில் நியமித்த நாற்பத்தெண்மர் பிடாரர்களில் ஒருவர் பெயர் 'திருவெனாவல் செம் பொற் சோதியான தகூஷிணமேரு விடங்கப் பிச்சனான ஞான சிவன்" என்பதாகும். பூமாதுபுணர என்ற விக்கிரம சோழரது திரு நெய்த்தானக் கல்வெட்டில்' 'செம் பொற் சோதி உய்ய வந்தான்' என்பது ஒருவர் பெயராகக் காணப்படுகிறது.