பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

கருவுணாயகர்

'நெற் குன்றக் கிழார் களப்பாள ராயர்' என்பவர் முதல் குலோத்துங்கன் காலத்திலும், விக்கிரம சோழன் காலத்தில் சில ஆண்டுகளும் வாழ்ந்தவர்; திருப்புகலூரில் உள்ள முதற் குலோத்துங்க சோழனது 49ஆவது ஆட்சியாண்டுக்குரிய கல்வெட்டொன்று,

பூரீ புகலூர்த் தேவர் மத்தியான்னம் அமுது செய்து அருளும்போது. நித்தம் பன்னிரண்டு பிராமணர் உண்பதாக ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துப் பேரூர் நாட்டு நெற்குன்றத்து நெற்குன்றக் கிழார் அரையன் கருவுனாயகரான களப்பாளராஜர் செய்வித்த சாலைக்கு... சாலைப் புறமாக இறையிவி செய்து' என்றுள்ளது." இப்பகுதியிலிருந்து இவர் நெற்குன்றம் என்னும் ஊரினர்; வேளாண் மரபினர்; அரையன் என்னும் சிறப்புப் பெயருடையவர். கருவுணாயகர் என்பது இவருடைய இயற்பெயர். திருநாவுக்கரசர் கச்சியேகம்பத் திருக்குறுந் தொகையில் இறைவனைக் 'கருவுணாயகன்' எனக் குறிப்பர்.

'திருவின் நாயகன் செம்மலர் மேலயன்

வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான் ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர் கருவு ணாயகன் கச்சியே கம்பனே'

எடுத்த பொற்பாதம் "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே." இது திருநாவுக்கரசரின் திருவிருத்தம் என்பது யாவரும் அறிந்ததே. சிதம்பரத்தில் உள்ள பல்லவன் கோப்பெருஞ் சிங்கனுடைய முப்பத்தாறாம் ஆண்டுக் கல்வெட்டில், 'இவை