பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 41

அருளால் ஊர்க் கணக்கு எடுத்த பொற்பாதப் பிரியன் எழுத்து' என்றுள்ளது."

நாடற்கரியதோர் கூத்து

ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரம்கொள் கருவி நாடற்கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து ஒடும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவ தியாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை

என்பது திருநாவுக்கரசரின் திருவதிகைக் காந்தாரப் பண்பாடலாகும். இதில் கண்ட நாடற்கரியதோர் கூத்தினை ஆடியவன் இறைவனே யாவன். அவ்விறைவனை நாடற்கரிய கூத்தன் எனலாம். இப்பெயர் மாறவர்மனான திரிவுனச் சக்கரவர்த்திகள் விக்கிரம பாண்டிய தேவனின் ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் வந்துள்ளது.

திருவதிகைத் திருக்கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் 'முதலியார் நாடற்கரிய கூத்தரும் நாயகரும் எழுந்தருளுங்கால் முற்பாடு திரை எடுத்தால் பதியிலார் ஆடவும் பிற்பாடு திரை எடுத்தால் தேவரடியார் ஆடவும் கடவதாதல் வேண்டும்' என்பது கல்வெட்டுச் செய்தி."

திறக்கப் பாடுவார்

திருநாவுக்கரசர் திருமறைக் காட்டில் பண்ணினேர் மொழியாள்' என்ற பதிகம் பாடி மறைக் கதவினைத் திறந்தருளினார். திருவாய் மூர்க்குத் தொடரச் சொல்லுங்கால்,

'திருக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்

உறைப்புப்பாடி அடைப்பித்தார் உந்நின்றார்"

என்ற திருக்குறுந்தொகையில் திருநாவுக்கரசர் தம்மைத் "திறக்கப் பாடியவர்' என்று குறித்துக் கொண்டார்.