பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 43

கெங்கையுடைய நாயனார் கோயிலில் திருமணிக்கங்ககைசீயன் என்ற அதிகாரி அவ்வூரில் உள்ள சில நிலங்களின் உரிமைகளை மாற்றியமைக்கிறார். அச்சாசனத்தில் பலரும் கையொப்பமிடுகிறார்கள். அவர்களுள் ஒருவர் திருக்காளத்தியாண்டார்தவப்பெருந்தேவு செய்தார் என்பராவார். இதே நாளில் இன்னொரு அறக்கட்டளை பிறப்பிக்கப் பெறுகின்றது. திருக்களாத்தித் திருமணிக் கெங்கையுடைய நாயனார் கோயிலின் வடக்குத் திருவீதித் தெற்கடையப் பாதியில் தவப்பெருந்தேவு செய்தார்க்குரிய நிலம் திருநாமத்துக் காணியாகக் கொடுக்கப்பெற்றது.

குளிச்செழுந்த நாயனார்

திருநாவுக்கரசர் கயிலையில் எம்பெருமானைத் தரிசிக்கச் சென்றவர். அது கூடாமையின், ஆங்கொரு குளத்தில் மூழ்கித் திருவையாற்றில் ஒரு குளத்தில் எழுந்தார். இதனைச் சேக்கிழார் சுவாமிகள் பின் வரும் பாடலில் கூறியுள்ளார்.

“ஆதி தேவர்தம் திருவருட் பெருமையார் அறியாதார்

போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி மாதொர் பாகனார் மகிழும் ஐயாற்றில் ஓர் வாவி மீது தோன்றிவந் தெழுந்தனர் உலகெலாம் வியப்ப." திருப்புகலூரில் ஒரு கல்வெட்டில்" குளிச்செழுந்த நாயனார் என்று காணப்பெறுகிறது. இது மேலே கூறியவாறு திருநாவுக்கரசரைக் குறிப்பதாகவே கொள்ளலாம்.

திருநாவுக்கரசு நாழி

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 16ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் திருநாவுக்கரசு நாழி என்னும் அளவையின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது".

வட்டணை காட்ட வந்த நாயகர்

பட்டுடுத்தப் பவளம்போல் மேனியெல்லாம்