பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 51

கோப்பெருஞ் சிங்கனுடைய 19 ஆம் ஆண்டுக்குரிய தில்லைக் கல்வெட்டு ஒன்று, 'ஆளுடைய நாயனார்க்கு வழியடிமை கொண்டான் என்னும் பெயரால் விக்கிரம சிங்கபுரத்தில் திருத்தோப்பு செய்வித்தமையைக் குறிக்கிறது."

பழு ஆவணச்சொக்கன்

"வெண்ணெய்நல்லூரில் அற்புதப் பழ ஆவணம் காட்டி இறைவன் தன்னை ஆட்கொண்டான்' என்பர் சுந்தரர்.

'கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்

காம கோபனைக் கண்ணுத லானைச்

சொற்ப தப்பொருள் இருள் அறுத் தருளும்

தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்

அற்பு தப்பழ ஆவணம் காட்டி

அடிய னாஎனை ஆளாது கொண்ட

நற்ப தத்தைநள் ளாறனை அமுதை

நாயி னேன்மறந் தென்நினைக் கேனே"

என்பது திருநாள்ளாற்றுத் திருப்பதிகப் பாடல்.

திருவெண்ணெய் நல்லூரில் உள்ள கோப்பெருஞ் சிங்கனின் 26ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றில் சிறுபுத்துருடையான் பெருமாள் பழவாவணச் சொக்கன் என்பவன் வெள்ளித் தனிக் காளங்கள் தந்தவை கூறப்படுகிறது’. பழவாவணச் சொக்கன் என்ற தொடர் 'மூலவோலை மாட்சியிற் காட்டிய இறைவனையே குறிப்பது.

பிச்சன் என்று பாடச் சொன்னான்

சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார் யாதினை அறிந்து என் சொல்லிப்பாடுகேன் என்றார் சுந்தரர். முன்பெனைப் பித்தன் என்றமையின் பித்தன் என்றே பாடுக என்றார் பரமனார். இதனை நினைப்பிக்கிறது ஒரு கல்லெழுத்து.