பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

உதயன் பூரீ கயிலாய முடையான் என்ற ஒருவர், "பிச்சன் என்று பாடச் சொன்னான்' என்று பெயரிட்ட காளங்களை வழங்கியதாகக் கோப்பெருஞ்சிங்கனது இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்து’ நுவல்கிறது.

வன்றொண்டர்

சுந்தரர் வன்மைகள் பேசிய பின் வன்றொண்டர் எனப் பெற்றார். இவ்வன்றொண்டப் பெயர் பூண்டவர் திருநெல்வேலி மாவட்டத்துக் கீழை மடஸ்தானத்து இருந்தனர் என்று கோநேரின்மை கொண்டானது கல்லெழுத்தினின்றும்’, ரீ சுந்தரபாண்டிய தேவர் கல்லெழுத்தினின்றும் அறிகிறோம்.

தம்பிரான் தோழர்

திருவாரூரில் உள்ள வடமொழிக் கல்வெட்டில் சுந்தரர் ஸ்வஸ்வாமி மித்ர எனக் குறிக்கப்பெறுவர். தம்பிரான் தோழர் என்ற தமிழ்ச் சொல்லின் நேர் வடமொழி ஆக்கப் பெயரே இது”. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திருக்கைச்சினம் (கச்சனம்) கல்வெட்டுச் சிறு கீழுரான முடிமான் தம்பிரான் தோழச் சதுர்வேதி மங்கலம் என்று ஊரின் பெயரைக் கூறும்”. நங்கை பரவையார்

சுந்தரர் நங்கை பரவையாரைத் திருவாரூரில் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டவர். நங்கைபரவையாரது திருவுருவமும் நம்பியாரூரது திருவுருவமும் தஞ்சை இராஜராசேச்வரத்தில் எழுந்தருள்விக்கப் பெற்றன என்று ஒரு கல்லெழுத்துக் கூறுகிறது’. நங்கை பரவையார்க்குத் திருவையாற்றுக் கோயிலில் விளக்கு எரிக்க நிலம் விடப் பெற்றிருந்த செய்தியை “நங்கை பரவையார் திருவிளக்குச் செய்' என்ற கல்லெழுத்துப் பகுதி அறிவிக்கிறது. இரண்டாம் குலோத்துங்கனுடைய7ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருவாரூர்க் கல்வெட்டுத்திருவாரூர்க்கோயிலில் எழுந்தருளுவிக்கப் பெற்ற ஆளுடைய நம்பி பரவைநாச்சியார் படிவங்களுக்கு அநபாய நல்லூர் என்ற ஊர் அளிக்கப் பெற்றதாகக் கூறுகிறது".