பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 53

முதல் இராசேந்திர சோழன்." இராசாதிராசன்' காலக் கல்வெட்டுக்கள் சிலவற்றில், 'அணுக்கியார் பரவைநங்கை யார்' என்பவள் குறிக்கப் பெறுகிறாள். பரவைநாச்சியாரின் பெயரைப் பூண்ட இவள் திருவாரூர்த் திருக்கோயிலில் பல திருப்பணிகள் ஆற்றினாள்.

முதல் ஆதித்த சோழன் காலத்தது எனக் கருதப்பெறும் வேதாரண்யக் கல்வெட்டொன்றில், “திருவாரூர் நங்கை பரவை" என்பவள் குறிக்கப் பெறுகிறாள்.'

முதல் இராசராசன் சோழமண்டலத்தின் பல தளிச் சேரிகளின்றும் கொண்டு வந்து தஞ்சைத் தளிச்சேரியில் பெண்டிரைக் குடியேற்றினான். திருவாரூரில் இருந்து தஞ்சைத் தளிச்சேரிக்கு மாற்றப்பெற்ற நாற்பத்து நால்வருள் பரவையின் பெயரைத் தாங்கியவள் ஒருத்தி யாவாள்'.

கிருத்தொண்டத்தொகை"

'ஈசனடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழவெடுத்துத் தேசமுய்யத் திருத்தொண்டத் தொகை' பாடினார் சுந்தரர். இப்பதிகம் பெரிய புராணத்துக்குப் பதிகமாக விளங்குவது. இது மக்கள் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது என்று கல்லெழுத்துக்களினின்று அறிகிறோம்.

திருதொண்டத் தொகை நினைவாகத் திருவிடைவாயிலில், 'திருத்தொண்டத் தொகையான் குகை' என்று ஒரு குகை இருந்தது என மூன்றாம் இராசேந்திர சோழனுடைய நான்காம் ஆட்சியாண்டுக் (கி.பி. 1250) குரிய கல்லெழுத்துக் கூறுகிறது. இக்குகையுள் திருமுறைகள் வைக்கப் பெற்றிருந்தன".

திருச்சி மாவட்டம் கோவந்தபுத்துரில் உள்ள மூன்றாம் இராசேந்திரனது 2ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு.” கோவந்தபுத்துரில் திருவிசையமங்கை என்ற திருக்கோயிலின் திருமடைவிளாகத்தில், 'திருத்தொண்டத் தொகையான் திருமடம்' இருந்தது என்று கூறுகிறது. இக்கல்வெட்டில்