பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 55

இனி இச்தொடர் பொன்னார் மேனி பட்டர் என்று ஒரு பட்டர் பெயரில் அமைந்ததாகச் சுந்தர பாண்டியனது கல்லெழுத்து' உரைக்கிறது. அன்றியும் மூன்றாம் குலோத்துங்கனது 34ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டினின்று ஊரின் உட்பகுதியொன்று “பொன்னார்மேனி விளாகம்' என்று பெயரிடப்பெற்றிருந்ததாக அறிகிறோம்."

கிழி பெற்றது

சுந்தரர் திருப்பாச்சிலாச்சிராமத்தில் பொற்கிழி பெற்றார். மூன்றாம் இராசரானது இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்தில் கிழி கொடுத் தருளிய திருவாசல் என்று ஒரு வாசல் குறிக்கப் பெறுகிறது.

உளோம் போகீர்

சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து, பின்னர்த் திருவாரூர்க்கு வரப் புறப்பட்டார். சூள் பொய்த் தமையின் இரு கண்களையும் இழந்தார். கண்ணிழந்து செல்பவர் திருவெண்பாக்கத்துக்கு வந்தார். சிவபெருமானை நோக்கிக் கண் வேண்டித் திருக்கோயிலில் உள்ளிரோ என்று பாடினார். இறைவன் 'உளோம் போகீர்’ என்று கூறினார். இதனை நினைவு கூரும் நிலையில் திருவெண்பாக்கம் என்னும் திருத்தலத்திற்கு அண்மையில் 'திருவுளம் பூதூர்' என்ற ஒரூர் 'உளோம் போகீர் புரம்' என்று அழைக்கப் பெற்றது எனச் சொல்லப்படுகிறது."

நொந்தா ஒண் சுடர் விளாகம்

'நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்

வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளிஉறையும்

எந்தாய் உன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே"

என்பது திருக்கச்சி மேற்றளித் திருப்பதிக முதற் பாடலாகும்.