பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

ஆளுடைய நம்பி என்பது சுந்தரரைக்குறிக்கும். சுந்தரர் வரலாற்றைக் கூறும் புராணம் ஆளுடைய நம்பி ரீ புராணம் எனப் பெற்றது போலும்.

சேக்கிழார் பெரிய புராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணம், கழறிற்றறிவார் புராணம், ஏயர்கோன் கலிக்காமர் புராணம் வெள்ளானைச் சருக்கம் என்ற நான்கு பகுதிகளில் சுந்தரர் வரலாற்றை மிக விரிவாகப் பாடியுள்ளார். ஆகவே பெரிய புராணத்தில் கண்ட இப்பகுதிகளையே ஆளுடைய நம்பி பூரீபுராணம் என்றனர் போலும்.

பெரிய புராண ஆராய்ச்சி என்னும் நூல்,” கேட்கவும் விளக்கவும் தக்கதாக இருப்பதனாலும், முன்வேறு நூல்கள் இல்லாமையாலும் பெரிய புராணத்துள் அடங்கிய சுந்தரர் புராணமே இந்த பூரீபுராணமாக இருத்தல் வேண்டும் எனக் கூறுகிறது.

மகிழடி சேவை

சுந்தரர் புவியுள் சிவலோகம்போலத் திகழும் திருவொற்றியூரை அடைந்தார்; திருக்கயிலையிலிருந்து அநிந்திதையார் ஞாயிறு என்ற ஊரில் ஞாயிறு கிழாரின் திருமகளாக அவதரித்திருந்தார். சங்கிலியார் என்று திருநாமம் பெற்றார்.

சங்கிலியாருக்குத் திருமணப் பருவம் வந்தது. யாரையும் மணக்கவிரும்பாமல் கன்னிமாடத்தில் தங்கித் திருவெற்றியூர்ப் பெருமாற்குத் திருத்தொண்டு புரிந்திருந்தார். திருவொற்றியூரை அடைந்த சுந்தரர் பூமண்டபத்தின் உள்ளே சங்கிலியாரைக் கண்டு அவரைக் குறித்து வினவினார். செய்தி அறிந்து சங்கிலியாரைத் தந்தருளுமாறு இறைவனை வேண்டினார். இறைவனும், 'சங்கிலியை உனக்குக் கொடுக்கின்றோம் கவலை ஒழி' என்றருளினார்.

பின்னர், சிவபெருமான் சங்கிலியார் கனவில் தோன்றி, 'நம்பியாரூரன் உன்னை மணஞ்செய்ய விரும்பி என்னை