பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 61

வேண்டியனான்' என்றருளி, "உன்னைப் பிரியாதவாறு சபதம் செய்து கொடுப்பான்' என்றும் கூறினார்.

பின்னர்ச் சுந்தரரிடம் எழுந்தருளிச் சங்கிலியிடம் உன்னைப் பிரியேன் என்று சபதம் செய்து கொடுத்தல்வேண்டும் என்றார். சுந்தரர், பெருமானை நோக்கி ‘இறைவனே சபதம் செய்து கொடுக்கச் சந்நிதிக்கு வரும்போது தாங்கள் திருமகிழின் கீழ் எழுந்தருள வேண்டும்' என்று வேண்டினார். சிவபெருமான் இசைந்தருளினார் சங்கிலியாரிடம் சென்றார்.

'சங்கிலியே! மகிழின் கீழ்ச்சபதம் செய்து கொடுத்தால் போதுமானது; சந்நிதியில் வேண்டாம் என்று கூறுவாயாக' எனக்

கூறி மறைந்தருளினார்.

மறுநாள் சுந்தரர் சபதம் செய்து கொடுக்கச் சந்நிதிக்கு வந்தார். சங்கிலியார் இறைவன் திருமுன் சபதம் செய்தல் தகாது; மகிழின் கீழ்ச் சபதம் செய்தால் போதும் என்றார். நம்பியாரூரர் திகைத்தார்; அங்ங்னமே திருமகிழ்க் கீழ்ச் சபதம் செய்து கொடுத்தார். மறுநாள் திருமணம் நிகழ்ந்தது.

இச்சுந்தரர் வரலாற்றை நினைவுகூர்ந்து திருவொற்றியூர்ப் பெருமானை திருமகிழ்க்கீழ் எழுந்தருள்வித்து விழாக்கொண்டாடுவது மகிழடி சேவை எனப்பெறும். இது ஒற்றியூரில் மட்டுமே கொண்டாடப்படுவது. இத்திருவிழா, பங்குனி உத்திரப் பெருவிழாவில் ஆறாம் திருநாளில் ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாளில் நடைபெற்றது என்று இக்கல்லெழுத்திலிருந்து அறியப் பெறுகிறது. தற்போது மாசி மகத்தை தீர்த்தவாரியாகக் கொண்ட பிரமோற்சவத்தில் ஒன்பதாம் நாளில் ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா நடைபெறுகிறது.

தாராசுரத்துச் சிற்பங்கள்

கும்பகோணத்துக்கு அண்மையில் உள்ள தாராசுரத்துக் கோயில் இரண்டாம் இராசராசனால் கட்டப் பெற்றது.