பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

கி. பி. 1393இல் வீரவிருபணவுடையார் தில்லை விடங்க நல்லூரில் 140 மாநிலம் தந்துள்ளார்.

இவ்வாளுடைய பிள்ளையார் கோவிலில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யப் பெற்றமையைக் கோப்பெருஞ்சிங்கனது சீகாழிக் கல்வெட்டொன்று காட்டுகிறது.

சீகாழி திருஞானசம்பந்தர் ஆலயத்தில் மங்கையர்க் கரசியாரும் எழுந்தருள்விக்கப் பெற்றுள்ளமை (375 of 1918) கல்வெட்டொன்றில் கூறப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராசராசனின் 12ஆம் ஆட்சியாண்டில் மங்கையர்கரசியார்க்குத் திருவமுதுபடிக்கு நிலமளிக்கப்பட்டது கல்வெட்டிற் கண்டது.

2. திருவெண்ணெய் நல்லுரர்ச் சுந்தரர் கோயில்

திருவெண்ணெய் நல்லூர்க் கோயிலின் உள் தீர்த்தக் குளத்தின் கிழக்குக் கரையில் சுந்தரர் எழுந்தருளியிருந்தார்.

'----------- தேவனார் கேணியின் கீழ்க்கரையில் எழுந்தருளி

நாச்சிமாரோடும் பூசைகொண்டருளுகின்ற ஆளுடைய நம்பி' H. H. H. H. H. என்று கல்வெட்டு இவரைக் குறிக்கிறது.

சுந்தரருக்கு அமுதுபடி உள்ளிட்டனவற்றுக்காகத் திருவெண்ணெய் நல்லூர் நாட்டுச்சபையினர் மேற்படி நாட்டுப் பட்டர்கள் ஆகியோர் அரைவேலி நிலம் தந்தனர். களத்தூரைச் சேர்ந்த சிறிய நம்பி சகஸ்ரன் என்பவன் ஆளுடைய நம்பிக்குத் தோட்ட நிலம் அளித்தான்.

ஆளுடைய நம்பி கோயிலில் திருமுறை ஒதப்பெற்றமையை இன்னொரு கல்வெட்டால் உணரலாம். ஆட்கொண்டார்கோயிலில் மடாதிபத்தியம் செய்யும் உடையார் அகமுடையான் என்பவன் கோயில் நிலத்தை விற்றான்; கிடைத்த காசினை ஆளுடைய நம்பிக்கு அமுதுபடி, திருக்கைக் கோட்டிப் புறமாகக் கோயில் கருவூலத்தில் முதலாக வைத்தான் என்பது அக்கல்வெட்டுச் செய்தி.