பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

ஆட்சியாண்டில் நாகமங்கலமுடையான் அம்பலங்க கோயில் கொண்டான் என்பவன் திருஞானம் பெற்ற பிள்ளையாரை எழுந்தருளுவித்தான். கோயிலாரும் ஒரு பார்ப்பனியும் கொடைகள் தந்தனர். (450 of 1918) இராராசனின் பதினெட்டாம் ஆட்சியாண்டில் கொழுந்தாண்டார் கோயிலில் எழுந்தருளியிருந்த இத்திருஞானம் பெற்ற பிள்ளையார்க்கு நிலம் தரப்பெற்றது (448 of 1918).

திருக்கொடுங் குன்றத்தில் சடையவர்மன் வீரபாண்டியனுடைய ஒன்பதாவது ஆட்சியாண்டில் கேரளசிங்க வளநாட்டுக் குலசேகரப் பட்டணத்து அருவியூரான கொடுங்குன்றமுடையான் திருஞானம் பெற்ற பிள்ளையாரை எழுந்தருளுவித்தான்.

தலை ஞாயிறு கோவிலில் மூன்றாம் இராசேந்திரன் கல்வெட்டுக்கள் இரண்டில் பார்வதி போகர் ஆலயத்தில் இருந்த திருஞானசம்பந்தர் திருஞானம் பெற்ற பிள்ளையார் என்று கூறப்பெறுகிறார்.