பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 71

5. மூவர் திருஉருவச் சிலைகள்

1. தஞ்சைக் கோயிலில்

“பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் முதல் ரீகாரியம் ஆராயும் அலுவலனாகத் திகழ்ந்தவன். இவன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் ஆற்றிய திருத்தொண்டு பலவற்றுள் மூவர் பிரதிமங்களை எழுந்தருள்வித்தைமையும் ஒன்றாகும்.

நம்பி ஆரூார் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் படிவம்

பாதாதிகேசாந்தம் பதினெழுவிரல் இரண்டு தோரை: உயரமும் இரண்டு திருக்கையும் உடையவராய்க் கனமாக" எழுந்தருள்விக்கப் பெற்றது. இது செப்புப் பிரதிமம். இவர் நின்ற பத்மம் இரண்டு விரல் தோரை உயரம் உடையது. இதனொடும்கூடம் செய்த பீடம் எண்விரல் சமசதுரத்து மூவிரலே இரண்டு தோரை உயரம் உடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தது. ருத்ராக்ஷத் தாழ்வடம் ஒன்றில் பொன்னின் சுரி 56ம் ருத்ராக்ஷம் 56ம் உட்பட நிறை எண்கழஞ்சு ஒன்பது மஞ்சாடி' விலை காசு. 25.

குறு வாணியக் குடியான பரகேசரி புரத்து நகரத்தார் கொடுத்தது.

ருத்ராக்ஷம் பொன்னின்சுரி கட்டிற்று ஒன்றும், நாண்படு

கண்ணும் கொக்குவாயும் உட்பட நிறை கழஞ்சே 7மஞ்சாடி, விலை காசு 3.