பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பேராசிரியர்கா. ம. வேங்கடராமையா

தைப்பூசத் திருநாள் 1

சித்திரைத் திருநாளில் திருத் தமனகம்

சார்த்தியருளும் திருநாள் 1

ஆடிப்பூரத் திருநாள் 1

ஆவணியாவிட்டத் திருநாள் 1

பவித்திரம் சார்த்தியருளும் திருநாள் 1

ஐப்பசிச் சதயத் திருநாளில்

எழுந்தருளும் திருநாள் 6

திருப்பங்குனித் திருநாளில் திருக்கொடி

ஏற்றுகைக்குத் திருமுளை சார்த்த

எழுந்தருளும் திருநாள் 1

தீர்த்தத்திற்குத் திருமுளை சார்ந்த

எழுந்தருளும் திருநாள் 1 திருநாளில் எழுந்தருளும் திருநாள் 1O

திருஆடித் திருநாளில் திருநாள் 6

ஆக 56

ஆளுடைய பிள்ளையாருக்கும் திருநாவுக்கரசர்க்கும் மூன்று சந்தி அழுதுபடையலும், சிறப்புத் திருநாள், திருக்கார்த்திகைத் திருநாட்களில் சிறப்பமுது படையலும் நிகழ்த்தப்பெற்றன. இவர்கள். ஐப்பசி சதயத் திருநாளில் ஒருநாளும், உத்திரத் திருநாளில் ஒருநாளும் மட்டும் திருவீதிக் கெழுந்தருளினர்.

3. வேறு சில கோயில்களில்

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பிரதிமங்கள் எழுந்தருள்விக்கப் பெற்றமை பற்றிய செய்திகள் பின்வருமாறு: