பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

6


இறுதியாகத்‌ திருவனந்தபுரத்தில்‌ இயங்கிவரும்‌ பன்னாட்டுத்‌ திராவிட மொழியியல்‌ கழகத்தில்‌ பணிபுரிந்தார்‌. 31. 1. 1995 அன்று வானுறையும்‌ தெய்வத்தோடு ஒப்பச்‌ சேர்ந்தார்‌.

பட்டங்களும்‌ ஆற்றிய பணிகளும்‌

சிவநெறிச்‌ செல்வர்‌ (மதுரை ஆதீனம்‌), கல்வெட்டாராய்ச்சிப்‌ புலவர்‌ (தொண்டை மண்டல ஆதீனம்‌), செந்தமிழ்க்‌ கலாநிதி (தருமை ஆதீனம்‌), சைவத்‌ தமிழ்‌ ஞாயிறு (அருள்நெறித்‌ திருக்கூட்டம்‌), தமிழ்மாமணி (பெங்களூர்த்‌ தமிழ்ச்‌ சங்கம்‌) ஆகிய சிறப்புப்‌ பட்டங்கள்‌ இவருக்கு வழங்கப்‌ பெற்றன.

பல பள்ளிகளின்‌ தாளாளர்‌,கல்லூரிகளின்‌ தாளாளர்‌ மற்றும்‌ பல்கலைக்‌ கழகங்களின்‌ பொறுப்புகள்‌ வகித்தவர்‌ இவர்‌. குமரகுருபரர்‌ திங்களிதழின்‌ நிர்வாக உறுப்பினராக ஐம்பதாண்டுகட்கும்‌ மேலாகப்‌ பணிபுரிந்த பெருமையும்‌ இவருக்குண்டு.

கட்டுரை நூல்கள்‌

இலக்கியக்‌ கேணி என்னும்‌ இவரின்‌ கட்டுரை நூல்‌ பல்வேறு காலங்களில்‌ எழுதிய இலக்கியக்‌ கட்டுரைகளின்‌ தொகுப்பாகும்‌. வரலாறு, கல்வெட்டுகள்‌ தொடர்புடன்‌ இலக்கியக்‌ கட்டுரைகள்‌ படைக்கும்‌ இவரின்‌ தனித்தன்மையை இக்கட்டுரைகளில்‌ காணலாம்‌.

சோழர்கால அரசியல்‌ தலைவர்கள்‌ என்ற இவரின்‌ இரண்டாவது நூலில்‌ அருணிதிகலியன்‌ தொடக்கமாகப்‌ பதினான்கு அரசியல்‌ தலைவர்கள்‌ பற்றிய ஆய்வுகள்‌ உள்ளன. சீயகங்கனின்‌ இயற்பெயர்‌ திரவேகம்‌ பமுடையான்‌ என்பது உட்பட நூற்றுக்கணக்கான புதுச்‌செய்திகள்‌ இந்நூலில்‌ உள்ளன.

கல்லெழுத்துக்களில்‌ என்னும்‌ நூலில்‌ மூவேந்தர்‌ காலங்களில்‌ நுண்கலைகள்‌ வளர்ந்த விதங்கள்‌ பற்றி விரிவாகக்‌ கூறப்பட்டுள்ளன.

ஆய்வுப்‌ பேழை என்னும்‌ இவரின்‌ நூலில்‌ 18 கட்டுரைகள்‌ உள்ளன. இவை காஞ்சிக்‌ கடிகை, தந்திசக்தி விடங்கியார்‌ உள்ளிட்ட கலை வரலாற்றின்‌ புதுச்செய்திகள்‌ கூறுவனவாகும்‌.

கல்லெழுத்துக்களில்‌ தேவார மூவர்‌ என்னும்‌ நூல்‌ பல பதிப்புகள்‌ கண்ட படைப்பாகும்‌. தேவார மூவர்‌ பற்றிக்‌ கல்லெழுத்துக்கள்‌