பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

முதல் இராசேந்திரனின் இருபதாம் ஆண்டில் திருமழபாடியில் பிள்ளையார் திருஞான சம்பந்த அடிகள், திருநாவுக்கரைய தேவர், நம்பி ஆரூரனார் ஆகியோர் பிரமிங்களைத் திருமாலரங்கனான திருப்பளித்தாமப் பிச்சனும் அவன் மனைவியும் எழுந்தருள்வித்தனர்; வழிபாட்டிற்கு நிவந்தம் தந்தனர் (37 of 1920). *

திருவாவடுதுறைத் திருக் கோவிலில், ஒரு முழமும் நான்கு விரலுயரமும் உடைய திருநாவுக்கரைய தேவர், பீடமுட்பட ஒரு முழம் ஆறு விரல் உயரத்தில் அமைந்த சிவஞான சம்பந்த அடிகள்', பதுமத்துடன் ஒருமுழம் ஆறுவிரல் உயரத்தில் அமைந்த நம்பி யாரு ரனார் ஆகிய மூவர் முதலிகளைத் திருக்காளத்திப் பிச்சன் என்பான் எழுந்தருளுவித்தான்.

திருக்குருகாவூர் வெள்ளடையில் குலோத்துங்க சோழனின் பதின்மூன்றாமாண்டில் மூவர் முதலிகள் எழுந்தருள்விக்கப் பெற்றனர்.

கோயிலூர் பால புரீசுவரர் கோயிலில் சகம் 1394இல் மறமடக்கியான் இராசேந்திர சோழபுரத்தைச் சேர்ந்த திருப்பனுார் உடையார் மன்றன் வணிகச் சக்கரவர்த்திகள் சுந்திர நாயனாரை எழுந்தருளுவித்தார் (Pd. 808).

அடிக்குறிப்புகள் 1. S. I. I. Vol. II Parti No. 38 and 41. 2. தோரை - நெல் 8 தோரை - 1 விரல்

12விரல் - 1 சாண் 2 சாண் - 1 முழம்

Salid Image - (உள் இடைவெளி இல்லாதது). 2 குன்றி - 1 மஞ்சாடி, 20 மஞ்சாடி - 1 கழஞ்சு. S. I. I. Vol. vii No. 485, 269 of 1901.

S. I, I. VoI. viii No. 288.

கொச்சைக்கிறைவன் சிவஞான சம்பந்தன் - திருக்ஷேத்திரக் கோவை - II, சிவஞான சம்பந்தராயினார் - பெரிய புராணம் -

திருஞான சம்பந்தர் புராணம், செ. 69.