பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பேராசிரியர்கா. ம. வேங்கடராமையா

கல்வெட்டுத் திருநாவுக்கரசு குகை என்று ஒரு குகையைப் பற்றிக் கூறுகிறுது. இக்குகை கட்டுவதற்கும் இக்குகைக்கு வரும் அபூர்விகளுக்கும் திருவைகாசித் திருநாளுக்கு வரும் மகேசுவரர்களுக்கு உணவு அளிக்கவும் நெல்தானம் செய்யப் பெற்றது. (219 of 1917) திருத்தாண்டகம் ஒதுவது குறித்தும் இக்கல்லெழுத்துக் கூறுகிறது.

ஆலாலசுந்தரன் குகை

மிழலை நாட்டுத் தலைவராகிய புலியூருடையான் ஆதித்த தேவன் என்பாருடைய மகளும், கண்ணமங்கலமுடையான் வீமப்பிள்ளை என்பாருடைய மனைவியும் ஆகிய ஒருவர், திருமணச்சேரித் திருக்கோயிலில் அம்மன் திருக்கோயிலைக் கட்டுவதற்கும், பூண்டி என்னும் ஊரினராகிய புகலிவேந்தர் என்பார்தங்குவதற்கும் ஆலாலசுந்தரன் குகை என்று ஒரு குகை கட்டுவதற்குமாக நன்கொடை வசூலித்தமை குறித்து மூன்றாம் இராசராசனின் ஆறாவதின் எதிராமாண்டு (1222ன் குரிய) கல்லெழுத்துக் கூறுகிறது. (28 of 1914).