பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 81

8. திருஞானசம்பந்தர் திருமடங்கள்

1. மதுரை

மதுரைமாநகரில் திருஞான சம்பந்தர் திருமடம் இருந்ததனைச் சடையமர்வன் குலசேகர பாண்டியனுடைய இரண்டாவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக் குறிக்கிறது. இவ்வாண்டில் பாண்டியன் தன் அரியணனையில் எழுந்தருளி இருந்து, சுவாமிகள் செல்வத் திருவாரூர் தகூகின கெளமுகி மடத்து ஆசாரிய சிஷ்யரில் தத்புருஷதேசிகர் திருவாய் மொழிந்தருளினபடி மாடக்குளக் கீழ் மதுரைத் திருஞான சம்பந்தன் மடத்திற்கு விலைகொண்டு நிலமளித்துள்ளான்.

2. திருவேடகம்

திருவேடகத்தில் உள்ள திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோநேரின்மை கொண்டானுடைய சிதைந்த கல்வெட்டு, 'இவ்வூரில் இருந்த திருஞானசம்பந்தன் மடத்தில் இருபது தபஸ்யருக்கு உணவு அளித்தற்காக நிலந் தரப் பெற்றதனைக் கூறுகிறது. (681 OF 1905)

3. திருப்புத்தூர்

முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 21ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுத் திருப்புத்தூரில் இருந்த திருஞானசம்பந்தன் திருமடத்து ஆசாரியர் ரீகண்ட சிவன் என்பாருக்கு நிலம் விற்கப் பெற்றமை காட்டுகிறது. (129 OF 1908)

4. திருவொற்றியூர்

திரிபுவனச்சக்கரவர்த்தி விசைய ಆ6ಕ- கோபால தேவனின் காலக் கல்வெட்டு ஒன்றில், “திருக்கோவலூரினனாய வணிகன் ஒருவன் நிலம் விலைக்குப் பெற்றான்; திருவொற்றியூரில்