பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 83

திருஞான சம்பந்தர் திருமடம்

திருநாவுக்கரசர் திருமடம்

திருமூலதேவர் திருமடம்

ஆகியவை இருந்ததாகக் குறிக்கிறது. (261 of 1927)

10. திருச்சத்திமுற்றம்

திருச்சத்தி முற்றத்தில், உடையார் கோயில் காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் கோயிலுக்குக் கிழக்கே திருஞானசம்பந்தன் திருமடம் இருந்தது.

இம்மடத்தில் திருச்சத்தி முற்றத்து முதலியார் சந்தானத்தவர் அருளாட்சி செய்தனர். இப்பிரிவினர் திருவானைக்கா நாற்பத் தெண்ணாயிரவன் மடம் (586 1908) வலிவலத்து மனத்துள் நாயனார் மடம் (109/1911) கோவிலுர் கூத்தாடு நாயனார் மடம் (218; 220 of 1908) ஆகிய மடங்களில் தலைவராகவும் இலங்கினர்.

திருச்சத்தி முற்றத்து முதலியார் சந்தானத்தை சேர்ந்த தவப்பெருமாள் ஆயின. ஞானசிவன் (3921 1908) திருஞான சம்பந்தர் மடத்துத் தலைவராகக் கூறப்பட்டுள்ளார். இன்று

கோயிலின் கிழக்கே இடிந்த மண்டபம் காணப் பெறுகிறது."

1. இந்நாளில் தெற்காவணி மூலவீதியில் திருஞானசம்பந்தர் திருமடம் திகழ்கிறது.

2. கல்வெட்டு-தமிழ்நாடுஅரசு தொல்லியல்துறை இதழ்காண்க