பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 85

மடத்தில் மகேசுவரர்க்கு உணவு அளிக்கத் தரப்பெற்ற நிவந்தத்தைக் கூறுகிறது. (538 of 1908)

5. திரிபுவனி

புதுச்சேரிப் பகுதி திரிபுவனியில் திருநாவுக்கரைசர் திருமடம் இருந்தது. பெருமாள் திருமேனி கலியாணத் திருமேனியாகவும், ஊரவர் நலம் பெறவும், திருநாவுக்கரைசு தேவன் திருமடத்தில் மாகேஸ்வரரும் சிவயோகிகளும் உணவுகொள்ளப் பன்னிரண்டாம் தரத்தில் நிலம் தரப் பெற்றமை முதற்குலோத்துங்கனின் நாற்பத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட்டிற் கண்ட செய்தி. (203 of 1909)

6. திருவதிகையில்

அ. திருநாவுக்கரையர் திருமடம்

திருவதிகையில் இருந்த திருநாவுக்கரசு தேவ மடத்துக்கு மடப்புறமாக மணவில் அரும்பாக் கிழானுக்குரிய 48000 குழி புன்செய் நிலம் நன்னிலமாக அதியரைய மங்கலத்து நகரத்தாரால் மாற்றித் தரப்பெற்றது என்பது முதல் குலோத்துங்கனின் நாற்பதாம் ஆண்டுக் கல்வெட்டில் கண்டது. (382 of 1921)

ஆ. வாகீச மடம்

திருவதிகையில் வாகீசன் மடம்' என்னும் திருமடமும் இருந்தது. முதல் குலோத்துங்கனின் நாற்பத்து நான்காமாண்டில் கணிச்சைப்பாக்கத்தவர் 2000 குழி நிலமும் பனைப்பாக்கத்துரார் ஒன்றரை வேலி நிலமும் இதற்கு மடப்புற இறையிலியாகத் தந்தனர். (S. . . vi-324)